Home செய்திகள் இந்தியா கொரோனா காலத்திலும் 17 நாடுகளுக்கு செல்ல இந்தியர்களுக்கு அனுமதி!.. முழு பட்டியல் இதோ!…

கொரோனா காலத்திலும் 17 நாடுகளுக்கு செல்ல இந்தியர்களுக்கு அனுமதி!.. முழு பட்டியல் இதோ!…

322
0
airlines
Share

கொரோனா காலத்திலும் இந்தியர்கள் 17 நாடுகளுக்கு பயணம் செய்ய சிறப்பு விமான பயண ஏற்பாடுகளை சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் செய்துள்ளது.

இரு நாடுகளுக்கிடையில் தேர்ந்தெடுக்கப்பட்ட சர்வதேச பயணிகள் விமானங்களை நடத்துவதற்கு உக்ரைனுடன் ஒரு தனி, இருதரப்பு சிறப்பு விமான ஏற்பாட்டை சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் செய்துள்ளதால், இப்போது இந்தியர்கள் 17 நாடுகளுக்கு பயணிக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சிறப்பு விமான பயண ஏற்பாடுகள் என்பது கொரோனா தொற்றுநோய் காரணமாக வழக்கமான சர்வதேச விமானங்கள் இடைநிறுத்தப்படும் காலத்தில் வணிக பயணிகள் சேவைகளை மீண்டும் தொடங்கும் நோக்கில், இரு நாடுகளுக்கு இடையிலான தற்காலிக போக்குவரத்து ஏற்பாடு ஆகும். அவை பரஸ்பர, அதாவது இரு நாடுகளிலிருந்தும் விமான நிறுவனங்கள் ஒரே மாதிரியான நன்மைகளை அனுபவிக்கின்றன.

ஜூலை 20 முதல் ‛ஏர்-இந்தியா’ அலுவலகங்கள் செயல்படும்…

இதனால் சிஐஎஸ் நாடுகளில் இந்திய குடிமக்கள் உக்ரைன் வழங்கிய பாஸ்போர்ட்களை வைத்திருக்கும் அனைத்து வெளிநாட்டு இந்திய குடிமக்களும் பயன்பெறலாம்.

ஆப்கானிஸ்தான், பஹ்ரைன், ஓமான், கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, ஈராக், ஜப்பான், மாலத்தீவுகள், நைஜீரியா, கத்தார், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், கென்யா, பூட்டான், இங்கிலாந்து மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளுடன் இந்தியா இதே போன்ற ஏற்பாடுகளை செய்து உள்ளது.


Share

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here