Home முகப்பு உலக செய்திகள் ஐ.நா தேர்தலில் இந்தியா வெற்றி.. மண்ணை கவ்விய சீனா!…

ஐ.நா தேர்தலில் இந்தியா வெற்றி.. மண்ணை கவ்விய சீனா!…

357
0
UN
Share

ஐக்கிய நாடுகள் சபையின் பொருளாதாரம் மற்றும் சமூக கவுன்சில் அமைப்பின் உறுப்பினர் தேர்தல் நடைபெற்ற நிலையில் இந்த தேர்தலில் சீனாவை தோற்கடித்து இந்தியா வெற்றி பெற்றுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ஐக்கிய நாடுகள் சபையின் பொருளாதாரம் மற்றும் சமூக கவுன்சிலின் ECOSOC என்ற பெண்களின் மேம்பாட்டுக்கான அமைப்பு பெண்களின் முன்னேற்றத்திற்காக பல்வேறு பணிகளை செய்து வருகிறது இந்த அமைப்பின் உறுப்பினர் பதவிக்கு நேற்று தேர்தல் நடைபெற்ற நிலையில் இந்த பதவிக்கு இந்தியா, சீனா, ஆப்கானிஸ்தான் ஆகியவை போட்டியிட்டன.

வாக்குச் சீட்டு முறையில் நடைபெற்ற இந்த தேர்தலில் இந்தியாவும், ஆப்கானிஸ்தானும் 54 இடங்களைப் பெற்று உறுப்பினர்களாகிய நிலையில் சீனா தோல்வியைத் தழுவியது.

மாயமான 5 இளைஞர்கள் ! சீனா இந்தியாவிடம் ஒப்படைக்கிறது…

இந்த தகவலை ஐநா சபைக்கான இந்தியாவின் நிரந்தர பிரதிநிதியான திருமூர்த்தி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். கெளரவம் மிக்க ECOSOC உறுப்பினர் பதவியை இந்தியா வென்றுள்ளதாகவும், இந்தியாவுக்கு ஆதரவு அளித்த அனைத்து நாடுகளுக்கும் நன்றி எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சென்னையைச் சேர்ந்த தமிழரான திருமூர்த்தியின் தொடர் முயற்சிகளால் ஐ.நா.வில் இந்தியா அடுத்தடுத்து வெற்றிகளை பெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


Share

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here