Home செய்திகள் இந்தியா இந்தியா விரைவில் தடுப்பூசியை விநியோகிக்கும் – மோடி…

இந்தியா விரைவில் தடுப்பூசியை விநியோகிக்கும் – மோடி…

300
0
Corona Vaccine
Share

மேற்கத்திய நாடுகளுக்கே, இந்தியாவால் தடுப்பூசி மருந்துகளை தயாரித்து அனுப்ப முடியும் என, அண்மையில் பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம் தெரிவித்திருந்தார். ஆனால், இந்தியாவால் தடுப்பூசிகளை உரிய பாதுகாப்புடன், விரைவாக வினியோகம் செய்ய முடியுமா என்ற கேள்வியை மேற்குலக நாடுகளின் விமர்சகர்கள் எழுப்பி வருகின்றனர். அதற்கு, அண்மையில், துாதஞ்சல் மற்றும் சரக்கு சேவை செய்யும் புளூ டார்ட், பதில் கொடுத்துள்ளது.

இந்தியாவில் பல ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது புளூ டார்ட். இந்நிறுவனம், இந்தியாவிலிருந்து பல மருந்துப் பொருட்களை, குளிர்பதன வசதியுடன் ஏற்றுமதி செய்ய உதவி வருகிறது.தற்போது, ‘கோவிட் – 19’ தாக்குதலை எதிர்க்க, இந்தியாவில் பலவகை தடுப்பு மருந்துகள் உற்பத்தியாகி வருகின்றன.

ஒன்பிளஸ் 8T வெளியாகும் தேதி அறிவிப்பு…

அவற்றில் பல மருந்துகளை எப்போதும், -80 டிகிரி செல்சியஸ் குளிர்ச்சி வரை வைத்து பாதுகாக்க வேண்டும். அத்தகைய தட்பவெப்ப நிலையைத் தரும், பாதுகாப்பான பெட்டிகள் பல்லாயிரக்கணக்கில் புளூ டார்ட்டிடன் இருப்பதாக அதன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும், கொரோனா தடுப்பு மருந்துகளை சில மணி நேரங்களில், உரிய இடங்களுக்கு கொண்டு செல்லும், தரை மற்றும் வான் வழி போக்குவரத்து வசதிகள் புளூ டார்ட்டிடம் உள்ளன.இந்தியாவால் முடியும். இதை நிரூபிக்கும் வகையில் செய்திகள் வரத் தொடங்கியிருப்பது, நம்பிக்கையை தருகிறது


Share

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here