Home செய்திகள் இந்தியா தைவானுடன் நெருக்கமான உறவுக்குத் தயாராகும் இந்தியா!.. ஒரே சீனா கொள்கையை ஞாபகப்படுத்தும் சீனா!…

தைவானுடன் நெருக்கமான உறவுக்குத் தயாராகும் இந்தியா!.. ஒரே சீனா கொள்கையை ஞாபகப்படுத்தும் சீனா!…

792
0
Zhao Lijian
Share

திட்டமிட்ட வர்த்தக பேச்சுவார்த்தைகளுடன் இந்தியாவும் தைவானும் மிகவும் நெருக்கமான உறவுகளை வெளிப்படையாக ஏற்படுத்தக்கூடும் என்ற செய்திகளுக்கு மத்தியில், சீனா இந்த நடவடிக்கைக்கு ஆட்சபனை தெரிவித்துள்ளதுடன், இந்தியாவுக்கும் தைவானுக்கும் இடையிலான எந்தவொரு அதிகாரப்பூர்வ பரிமாற்றத்திற்கும் எதிர்ப்பு தெரிவிப்பதாகக் கூறியுள்ளது.

சீன வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில், தைவானுடனான தனது உறவை எவ்வாறு அணுக வேண்டும் என்பது குறித்து இந்தியாவுக்கு அறிவுறுத்தியது. அதே நேரத்தில் ஒரே சீனா கொள்கையை கடைப்பிடிக்குமாறு கேட்டுக் கொண்டது.

சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ஜாவோ லிஜியன் ஒரு ஊடகவியலாளர் சந்திப்பில், ஒரு சீனக் கொள்கை என்பது இந்தியா உள்ளிட்ட சர்வதேச சமூகத்தின் உலகளாவிய ஒருமித்த கருத்தாகும் என்று கூறினார்.

கொல்கத்தாவில் சக்தி வாய்ந்த வெடி விபத்து!.. வெடிகுண்டு நிபுணர்கள் தீவிர சோதனை!…

முதலீட்டு வாய்ப்புகள் குறித்து இந்தியாவும் தைவானும் 2018’ஆம் ஆண்டிலேயே இருதரப்பு ஒப்பந்தத்தை செய்திருந்ததை நினைவு கூறலாம். இந்தியாவும் தைவானும் முறையான இராஜதந்திர உறவுகளைப் பேணவில்லை என்ற போதிலும் இது முக்கியத்துவம் வாய்ந்ததாகக் பார்க்கப்படுகிறது .

முன்னதாக கடந்த மே மாதம் 5’ஆம் தேதி, லடாக் எல்லையில் சீனா ஆக்கிரமிப்பு முயற்சியில் ஈடுபட்டதற்கு பிறகு, இந்திய எம்பிக்கள் வெளிப்படையாக தைவான் அதிபரின் பதவியேற்பு விழாவில் சீனாவின் எச்சரிக்கையையும் மீறி கலந்து கொண்டது.

பின்னர் சமீபத்தில் லடாக் மற்றும் அருணாச்சல பிரதேசத்தை இந்தியாவின் ஒரு பகுதியாக அங்கீகரிக்கவில்லை என சீனா கூறியபோது, “ஒரே சீனா கொள்கையைப் பின்பற்றச் சொல்லும் சீனா, பிறநாட்டு உள் விவகாரங்களிலும் இதே நிலைப்பாட்டை எடுக்க வேண்டும்.” எனக் கூறியது.

இதன் அடுத்த கட்டமாக, சீனாவுக்கு வலுவான ராஜதந்திர ரீதியாக பதிலடி கொடுக்கும் விதமாக, தைவானுடன் நெருக்கமான உறவைப் பேண உள்ளதாக கூறப்படுகிறது.


Share

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here