Home ஆன்மீகம் சிதம்பர நடராஜர் கோவிலும் : மனிதனும்..

சிதம்பர நடராஜர் கோவிலும் : மனிதனும்..

494
0
Share

முன்னோர்கள் செய்த அனைத்து காரியங்களுமே சிந்தனைக்குரிய விஷயமாகும். ஆம் அவர்கள் செய்த ஒவ்வொரு காரியங்களிலும் மனிதர்களையும் சாஸ்திரங்களையும் ஒப்பிட்டுத் தான் செய்திருப்பார்கள். சிதம்பரம் நடராஜர் கோவிலைக் கட்டிய சிறப்பம்சங்களையும் மனிதனுடைய ஒப்பிடுகையில் இந்த கட்டுரையில் பார்ப்போம்:

*சிதம்பர நடராஜர் கோவில் அமைந்துள்ள இடமானது உலகின் மையப்பகுதியைச் சார்ந்துள்ளது. எனவே உலகின்  மையப் பகுதியில் ஆதிசிவன் குடிகொண்டுள்ளான்.

*பஞ்சபூத கோவில்கள் என்று அழைக்கப்படும் ஆகாயத்தைக் குறிக்கும் தில்லை நடராஜர் கோவில், நிலத்தைக் குறிக்கும் காஞ்சி ஏகாம்பரேஸ்வரர் கோவில், காற்றைக் குறிக்கும் காளஹஸ்தி கோயில் இவை மூன்றும் ஒரே நேர்கோட்டில் அமையப்பெற்றிருக்கும். அதாவது சராசரியாக 79 டிகிரியிலும், 41 minutes East தீர்க்க நேர் மார்க்கத்தில் அமைந்துள்ளது. அதாவது கூகுள் மேப் வாயிலாக மேலிருந்து இருந்து கீழ் பக்கம் பார்த்தால் ஒரே நேர்க்கோட்டில் அமைந்திருக்கும். அது எவ்வாறு ஒரு பொறியாளன் இல்லாமல் அக் காலத்திலேயே கட்டப்பட்டது என்பது பெரும் அதிசயமாகக் கருதப்படுகிறது.

*சிதம்பரம் நடராஜர் கோயிலில் 9 நுழைவு வாயில்கள் உள்ளன. இது மனித உடலில் ஒன்பது துவாரங்களை ஒப்பிடுகிறது.

*சிதம்பர நடராஜர் கோவிலின் விமானம் மேலிருக்கும் கூரையானது 21,600 தங்கத் தகடுகள் கொண்டு செய்யப்பட்டிருக்கும். இது மனிதனுடைய சுவாசிக்கும் திறனைக் குறிக்கிறது மனிதன் ஒரு நாளைக்கு 21,600 முறை சுவாசிக்கிறான்.

*மேலும் மேற்கூரைகள் இணைக்கப் பயன்படுத்திய இழைகள் அல்லது ஆணியானது 72000 எண்ணிக்கை. இந்த 72,000 எண்ணிக்கை என்பது மனிதனுக்குள் உள்ள நாடி நரம்புகளின் எண்ணிக்கை ஆகும். இதுவே மனிதனுக்கு ஆற்றலையும் சக்தியையும் அளிக்கிறது.

*திருக்கோவிலின் உள்ள பொன்னம்பலம் சற்று இடதுபுறமாக அமைந்துள்ளது. இது நம் உடலில் இதயத்தைக் குறிக்கிறது. இந்த இடத்தை அடைய ஐந்து படிகள் ஏற வேண்டும். அதாவது ஐந்து படிகளும் சிவனின் நாமத்தைக் குறிக்கும் சி.வா.ய.ந.ம என்பதே ஆகும்.

*இதேபோல் கனகசபை மற்ற கோவில்களை இருப்பதைப் போன்ற நேராக இல்லாமல் பக்கவாட்டில் அமைந்திருக்கும். இந்த கனகசபை 4 தூண்களைக் கொண்டிருக்கும். இவை உலகின் 4 வேதங்களைக் குறிக்கிறது.

*பொன்னம்பலத்தில் 28 தூண்கள் இடம்பெற்றிருக்கும். இந்த 28 தூண்களும் 28 ஆகமங்களைக் குறிக்கிறது. மேலும் சிவனை 28 வழிபாடுகளில் வணங்கலாம் என்று குறிக்கும். இந்தத் தூண்களின் மேல் பரப்பானது 64 + 64 என்ற அளவில் உள்ளது. இந்த 64 என்பது கலைகளைக் குறிக்கும். இதன் குறுக்கீடு பலகைகள் ஆனது மனித உடலில் ஓடும் ரத்தம் நாளங்களைக் குறிக்கிறது. இந்த ரத்தநாளங்கள் வழியாகவே மனிதனுக்கு ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு ரத்தம் கொண்டு செல்ல பயன்படுத்தப்படுகிறது.

*மேலும் கோவில்களின் பொற் கூரை மேல் அமைந்துள்ள 9 கலசங்கள் 9 சக்தியைக் குறிக்கிறது. அர்த்த மண்டபத்தில் உள்ள 6 தூண்கள் சாஸ்திரங்களைக் குறிக்கிறது. அர்த்த மண்டபத்தின் அருகில் உள்ள 18 தூண்கள் 18 புராணங்களையும் குறிக்கின்றது.

*சிதம்பர நடராஜரின் உருவமானது நடனமாடிக்  கொண்டிருக்கும் வரையில் அமையப்பெற்றிருக்கும். இது ஆனந்த தாண்டவம் என்று சொல்லப்படுகிறது. இதற்கு cosmic dance என்று பல நாடுகளில் அறிஞர்களால் பெயரிடப்பட்டுள்ளது.


Share

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here