Home லைஃப் ஸ்டைல் ஆரோக்கியம் பசிக்கிறதா ! 10 நிமிடத்தில் சேமியா புட்டு.. ஈஸியா செய்யலாம்..

பசிக்கிறதா ! 10 நிமிடத்தில் சேமியா புட்டு.. ஈஸியா செய்யலாம்..

410
0
Share

அனைவரும் விரும்பி உண்ணும் அளவிற்கு சேமியா புட்டு. சத்தானதும் கூட எனவே இந்த பதிவில் விளக்கமாக செய்முறையுடன் கொடுக்கப்பட்டுள்ளது.

தேவையான பொருட்கள் :
நொறுக்கிய சேமியா – ஒரு கப்
சர்க்கரை – அரை கப்
தேங்காய் துருவல் – அரை கப்
நெய் – 2 தேக்கரண்டி
முந்திரி – தேவையான அளவு
ஏலக்காய்த்தூள் – ஒரு தேக்கரண்டி
உப்பு – ஒரு சிட்டிகை

செய்முறை :

கடாயில் முந்திரியை போட்டு நெய் ஊற்றி வறுத்தெடுத்து சிறிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ள வேண்டும். அதே கடாயில் சேமியாவை போட்டு நன்கு வறுத்து கொள்ள வேண்டும்.

வறுத்த சேமியாவில் சிறிது உப்பு சேர்த்து கலந்த பின்னர் சிறிது சிறிதாக தண்ணீர் சேர்த்து பிசறி 10 நிமிடம் அப்படியே வைக்க வேண்டும்.

தேங்காய் துருவல், நறுக்கிய முந்திரி, ஏலக்காய் தூள் சேர்த்து கலந்து வைத்து கொள்ளவும்.

புட்டு குழலில் முதலில் தேங்காய் துருவலை போட்டு அதன் மேல் பிசறி வைத்த சேமியாவை போட்டு அதன் பின் தேங்காய் துருவல், சேமியா என்ற வகையில் போட்டு ஆவியில் 10 நிமிடங்கள் வேக வைத்து எடுத்தால் சத்தான சுவையான சேமியா புட்டு ரெடி.

நீங்களே வீட்டில் தயார் செய்து பாருங்களேன்.


Share

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here