Home செய்திகள் இந்தியா பத்தாம் வகுப்பு மதிப்பெண் பார்ப்பது எப்படி ?

பத்தாம் வகுப்பு மதிப்பெண் பார்ப்பது எப்படி ?

401
0
Share

பத்தாம் வகுப்பு மதிப்பெண் வரும் ஆகஸ்ட் 10ஆம் தேதி வெளியிட இருப்பது அனைவரும் அறிந்ததே. இதனை எஸ்எம்எஸ் வாயிலாகவும், இணைய வாயிலாகவும் அறிந்து கொள்ள முடியும் என்று அரசு தேர்வுகள் இயக்கம் தெரிவித்துள்ளது.

கொரோனா பரவல் காரணமாக மார்ச் 22 முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதன் காரணமாகத் தமிழ்நாட்டில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டது. இதன் காரணமாகக் காலாண்டு மற்றும் அரையாண்டு மதிப்பெண்கள் அடிப்படையில் 80 சதவீதமும் மாணவர்கள் வருகை பதிவேட்டில் இருந்து 20 சதவீத மதிப்பெண்களும் கணக்கிடப்பட்டுள்ளது. இந்த ஆண்டு பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் மதிப்பெண்கள் இதன் அடிப்படையில் தான் வெளியிட உள்ளனர்.

இது தொடர்பாக அரசு தேர்வுகள் இயக்கம் எஸ்எம்எஸ் மற்றும் இணையத்தில் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என்று தெரிவித்துள்ளது. பள்ளி மாணவர்களிடம் இருந்து பெறப்பட்ட உறுதி மொழி படிவத்தில் உள்ள மொபைல் எண்ணிற்கு மாணவர்களின் மதிப்பெண்கள் எஸ்எம்எஸ் வாயிலாகத் தெரிவிக்கப்படும். ஆகஸ்ட் 10ம் தேதி காலை 9.30 மணி அளவில் அந்த எண்ணிற்கு அனுப்பப்படும். அது மட்டுமில்லாமல் கீழே குறிப்பிட்டுள்ள இணையதளங்களிலும் மாணவர்களின் பதிவு எண்ணைக் கொண்டு மதிப்பெண்ணை அறிந்து கொள்ளலாம்.
www.tnresults.nic.in

www.dge1.tn.nic.in

www.dge2.tn.nic.in

ஆகஸ்ட் 17 முதல் 21ம் தேதி வரை பள்ளி மாணவர்கள் தலைமை ஆசிரியர்களிடம் இருந்து தற்காலிக சான்றிதழைப் பெற்று மேற்படிப்பிற்குப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.


Share

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here