Home ஆன்மீகம் ருத்ராட்ச மணிகள் தரமானதா,போலியானதா எனக் கண்டறிவது எப்படி ?

ருத்ராட்ச மணிகள் தரமானதா,போலியானதா எனக் கண்டறிவது எப்படி ?

658
0
Share

இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலானோர் ருத்ராட்ச மணிகளை அணிகின்றனர். இந்த ருத்ராட்சம் என்பது சிவனின் ஆசி பெற்ற மணி என்று கூறுவர். இந்த ருத்ராட்ச மணிகளைக் கொண்டு மாலையாகவும், ஒரு சிலர் ஒரே ஒரு ருத்ராட்ச மணியும் அணிந்திருப்பர். அப்படிப்பட்ட இந்த ருத்ராட்சங்கள் தரமானதா இல்லை போலியானதா என்று எவ்வாறு அறிவது.

அதற்கு சில எளிய வழிமுறைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது :
முதலில் கைகளால் எடுத்துச் சோதனையிட வேண்டும். அவை பார்ப்பதற்கு ஒரே மாதிரி தோற்றத்தை வழங்கினால் அவை போலியானவை. ஏன் என்றால் இந்த ருத்ராட்சங்கள் மோல்டிங் எனப்படும் செயற்கை முறையில் தயாரிக்கப்பட்டதாக இருக்கலாம். அந்த செயற்கை முறையில் வடிவமைக்கப்பட்டு இருப்பதால் அனைத்தும் ஒரே அளவிலும், வடிவத்திலும் காணப்படுகின்றது.

இயற்கையாக வளரும் ருத்திராட்சங்கள் நிச்சயம் சிறிய வேறுபாடு காணப்படும். சிறு துளையாவது இருக்கும்.

இந்த தரமான ருத்ராட்சங்கள் இரண்டு தாமிர தகடுகளுக்கு இடையில் வைத்தால் சுழலும் தன்மை கொண்டது. மேலும் நீரில் போட்டால் மூழ்கும் தன்மை கொண்டது. செயற்கை முறையில் தயாரிக்கப்படும் ருத்ராட்சங்கள் மிதக்கும் தன்மையுடன் இருக்கும்.


Share

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here