Home டெக்னாலஜிஸ் IOT இணையச் சேவையில் இந்தியா முன்னிலை வல்லரசு நாடுகளே இந்தியாவிற்குப் பிறகு தான் எப்படித் தெரியுமா ?

இணையச் சேவையில் இந்தியா முன்னிலை வல்லரசு நாடுகளே இந்தியாவிற்குப் பிறகு தான் எப்படித் தெரியுமா ?

352
0
Share

உலக அளவில் இணையச் சேவையைக் குறைந்த விலையில் வழங்குவதில் இந்தியா 9வது இடத்தில் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வல்லரசு நாடுகளைத் தாண்டி இந்தியா முன்னிலையில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்தியாவில் நாளுக்கு நாள் இணையசேவை உபயோகிப்போர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இது வரை 70 கோடிக்கும் அதிகமானோர் இணையச் சேவையைப் பயன்படுத்தி வருகின்றனர். ஸ்மார்ட்போன் பயன்பாடு தொடங்கிய பிறகு இணையச் சேவை கட்டுக்கடங்காமல் உயர்ந்து வருகிறது. அது மட்டுமில்லாமல் சீனாவை அடுத்து இந்தியாவில் தான் மிகப்பெரிய ஆன்லைன் வர்த்தகம் நடைபெறுகிறது. இருப்பினும் இந்தியா இணையச் சேவையில் தரம் மற்றும் அதனுடைய கட்டமைப்புகளில் பின்தங்கி உள்ளது என்ற குற்றச்சாட்டுப் பெருவாரியாக இருந்து வருகிறது. இதனைப் பிரபல நிறுவனமான சர்ப்ஷார்க் தெரிவித்துள்ளது.

மேலும் உலக அளவில் இணைய சேவை தரத்தில் இந்தியா 79வது இடத்தில் இருப்பது வருத்தத்தை அளிக்கிறது. இதற்கு குவாலிடி ஆஃ லைஃப் இன்டெக்ஸ் ஒரு ஆய்வையும் நடத்தியது. இந்தப் பட்டியலில் உலக அளவில் டென்மார்க் 1ல் இடத்தைப் பிடித்திருப்பதாகவும், ஆசியாவில் ஜப்பான் மற்றும் அமெரிக்க கண்டத்தில் கனடா போன்ற நாடுகள் இண்டர்நெட் சேவை தரத்தில் முதலிடத்தில் இருப்பதாகத் தெரிவித்துள்ளது.

ஏன் இவ்வளவு கீழ் இந்தியா இருக்கிறது என்றால் இண்டர்நெட் சேவையில் மந்தமான நிலை, சீரற்றதாகவும் இருப்பதாலேயே தரவரிசைப்பட்டியலில் கீழே இருக்க இதுவே காரணமாகக் கருதப்படுகிறது. இருப்பினும் மக்களுக்குக் குறைந்த விலையில் இணையச் சேவையை வழங்குவதில் இந்தியா பல வல்லரசு நாடுகளில் தாண்டி 9வது இடத்தில் உள்ளது JIO தொலைத்தொடர்பு நிறுவனம் வந்த பிறகு இந்த இணையச் சேவை குறைந்த விலையில் கிடைத்தது குறிப்பிடத்தக்கது.


Share

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here