Home செய்திகள் இந்தியா வீட்டு வாசலிலேயே மின் கட்டண வசூல்- தமிழக அரசு அறிமுகம்..

வீட்டு வாசலிலேயே மின் கட்டண வசூல்- தமிழக அரசு அறிமுகம்..

343
0
Tamil Nadu General Secretariat
Share

தமிழ்நாட்டில் முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு இலகுவாக வீட்டு வாசலிலேயே மின் கட்டணம் வசூல் செய்யும் முறையைத் தமிழக அரசு அறிமுகப்படுத்துகிறது.

இது நாள் வரை தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மின் இணைப்புகளுக்கும் இரு மாதங்களுக்கு ஒரு முறை மின்வாரிய ஊழியர்கள் வாயிலாக நேரில் வந்து மின் பயன்பாட்டிற்கான கணக்கீட்டை எடுக்கின்றனர். அதன் பிறகு மின் கட்டணத்தைப் பயனீட்டாளர்கள் மின்வாரியத்தில், தபால் நிலையத்தில், இ – சேவை மையங்களில் அல்லது மொபைல் செயலிகள் வாயிலாகச் செலுத்தலாம். சட்டசபையில் POS கருவி வாயிலாக கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகள் முறையில் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனையை வீட்டு வாசலிலேயே வசூல் செய்யும் கூடுதல் வசதி அறிமுகப்படுத்தப்படும் என்று மார்ச் மாதம் தெரிவித்திருந்தது. இது முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் தங்கள் கட்டணத்தை இலகுவாகச் செலுத்த விரும்புபவர்களுக்கு ஏதுவாக இருக்கும் என்று அமைச்சர் தங்கமணி தெரிவித்திருந்தார்.
மார்வெல் ஸ்டுடியோஸ் வெளியிடும் வெப்சீரிஸ் – ரசிகர்கள் கொண்டாட்டம்..

இவ்வாறு கணக்கீடு குறிப்பிடும் போது மின் கட்டணத்தை வசூல் செய்யும் POS கருவி மின்வாரிய ஊழியர்கள் கொண்டு வருவார்கள். அதன் மூலம் டெபிட் கார்ட், கிரெடிட் கார்ட் வாயிலாகச் செலுத்தலாம். இது பயனாளிகளுக்கு மிகவும் ஏதுவாக இருக்கும் என்று அரசு தரப்பில் என்கின்றனர். மேலும் பணம் செலுத்த விரும்புவோர் கியூ ஆர் கோடு எனும் ரகசிய குறியீட்டு எண் ஸ்கேன் செய்து மொபைல்போன் வாயிலாகவும் பணத்தைச் செலுத்தலாம். இந்த வசதி விரைவில் அறிமுகம் செய்யப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.


Share

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here