Home செய்திகள் இந்தியா மீண்டும் தங்கம் விலை விர்ர்… வெள்ளி உச்சம்..

மீண்டும் தங்கம் விலை விர்ர்… வெள்ளி உச்சம்..

365
0
Share

தொடர் ஏற்றத்தை அடுத்துக் கடந்த சில தினங்களாகத் தங்கத்தின் விலை சற்று குறைந்தது. 43 ஆயிரத்து இருக்கும் அதிகமாக ஒரு சவரன் விலை சில்லறை விலையில் விற்ற நிலையில். கடந்த சில தினங்களாக 40 ஆயிரத்திற்கு ஒரு சவரன் விலை விற்பனையானது. தற்போது மீண்டும் 40 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. இதனால் பொதுமக்கள் அஞ்சத் துவங்கி உள்ளனர்.

கொரோனா ஊரடங்கிற்குப் பிறகு தங்கத்தின் மீதான முதலீடு ETF பத்திரத்தின் மீதான முதலீடும் தொடர்ந்து அதிகரித்த வந்தது. இதனால் சில்லறை விலையில் தங்கத்தின் விலை விண்ணை முட்டும் அளவிற்கு உயர்ந்தது. அதன் பிறகு கடந்த சில தினங்கள் சற்று குறைந்து மக்கள் மூச்சு விட்டனர். இந்நிலையில் இன்று மீண்டும் 22 காரட் ஆபரணத் தங்கம் என்பது 40 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது இதே போல் முதலீடுகள் வெள்ளியின் மீது குவியத் தொடங்கின வெள்ளியின் விலை தொடர்ந்து உச்சத்தில் உள்ளது.

தங்கம் 1கிராம் ரூ.35 உயர்ந்து ரூ.5,111க்கும் ஒரு சவரன் ரூ.280 உயர்ந்து ரூ.40,888-க்கு விற்பனை ஆகிறது.
வெள்ளி ஒரு கிராம் வெள்ளியின் விலை 30 காசு உயர்ந்து ரூ.76.70க்கு சில்லறை விலையில் விற்பனை ஆகிறது


Share

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here