Home ஆன்மீகம் விநாயகர் சதுர்த்தி விழாவிற்குத் தமிழகத்தில் அனுமதி இல்லை…

விநாயகர் சதுர்த்தி விழாவிற்குத் தமிழகத்தில் அனுமதி இல்லை…

703
0
Share

தமிழ்நாட்டில் கொரோனா பரவல் காரணமாக அனைத்து விழாக்களும் ரத்து செய்யப்பட்டன. அந்த வரிசையில் தற்போது 22.8.2020 ஆம் தேதி நடைபெறவிருந்த விநாயகர் சதுர்த்தி விழாவிற்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக மார்ச் 22 முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இந்த ஊரடங்கு இந்த மாத இறுதி வரை அமலில் உள்ளது. இதற்கிடையில் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடுவதற்குச் சிலைகள் வைக்கவும், ஊர்வலம் செல்லவும், சிலைகளைக் கரைக்கவும் அனுமதி இல்லை என்று தற்போது தமிழக அரசு அறிவித்துள்ளது.

தமிழக அரசு இது வரை ஏராளமான கொரோனா தடுப்பு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. பொதுமக்கள் பாதுகாப்பு கருதி, பொது இடங்களில் விநாயகர் சிலைகளை வைப்பதோ, அல்லது சிலைகளை வைத்து விழா கொண்டாடுவதோ, விநாயகர் சிலைகளை ஊர்வலமாகக் கொண்டு செல்லவோ, அச்சிலைகளை நீர்நிலைகளில் கரைக்கவோ அனுமதியில்லை என்று அறிவித்துள்ளது. அவரவர் இல்லங்களில் இந்தாண்டு பாதுகாப்பு கருதி விநாயகர் சதுர்த்தியைக் கொண்டாடுமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதே போல் விநாயகர் சதுர்த்தி பண்டிகை கொண்டாடுவதற்குத் தேவையான பொருட்களை வாங்கச் செல்பவர்கள் முக கவசம் அணிந்து கடைக்குச் செல்ல வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதைப் போல அனைத்து இடங்களிலும் அரசு தெரிவித்துள்ள கட்டுப்பாடுகளையும் விதிமுறைகளையும் கடைப்பிடிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது சிறிய கோவிலில் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது எனவே கோவில்களில் கட்டுப்பாட்டு விதிகளுக்கு உட்பட்டு விநாயகர் சதுர்த்தி கொண்டாடிக் கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.


Share

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here