Home செய்திகள் இந்தியா காபித்தூளில் காந்தியின் படம்.. சென்னை ஆசிரியர் கின்னஸ் சாதனை முயற்சி…

காபித்தூளில் காந்தியின் படம்.. சென்னை ஆசிரியர் கின்னஸ் சாதனை முயற்சி…

308
0
Share

சுதந்திர தின விழாவை முன்னிட்டு கின்னஸ் சாதனை முயற்சியில் சென்னை ஓவிய ஆசிரியர் காபித்தூள் மகாத்மா காந்தியின் உருவப் படத்தை வரைந்தார்.

சென்னை கிண்டி கத்திப்பாரா அருகிலுள்ள தனியார்ப் பள்ளியில் ஓவிய ஆசிரியராக சிவராமன் என்பவர் பணிபுரிந்து வருகிறார். இவர் ஏற்கனவே ஏராளமான ஓவியங்களை வரைந்து பல போட்டிகளில் கலந்துள்ளார். தற்போது 74வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு 2020 சதுர அடி அளவில் காந்தியின் உருவப் படங்களை 74 விதமாக இணைந்துள்ளார். அதுவும் வெறும் 24 மணி நேரத்தில்.

இந்தப் படங்கள் அனைத்தும் காபித்தூள் கொண்டு வரையப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. காபித் தூள் நன்கு கரைத்துக் கொதிக்க வைத்து அதில் தண்ணீர் ஊற்றி அதைக் கொண்டு வரையப்பட்டுள்ளது. இதற்கு முன்பு கிரீஸ் நாட்டை சேர்ந்த ஓவியக் கலைஞர் ஒருவர் காபி துளை கொண்டு 1704 சதுர அடி அளவில் அந்நாட்டு வரைபடத்தை வரைந்தார். அதுவே உலக சாதனையாகக் கருதப்பட்டது. அதையடுத்து மிகப்பெரிய படத்தை இவர் வரைந்துள்ளார். தற்போது இந்தப்படம் கின்னஸ் சாதனைக்குப் பரிந்துரைக்கப்பட்டு உள்ளதாகத் தெரிகிறது.


Share

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here