Home செய்திகள் இந்தியா மீண்டும் முழு ஊரடங்கா ?

மீண்டும் முழு ஊரடங்கா ?

408
0
lock down effort prevent spread corona
Share

பிரிட்டனில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதை அடுத்து மீண்டும் முழு ஊரடங்கு அமல் படுத்த வாய்ப்பு உள்ளது என அந்நாடு தெரிவித்துள்ளது.

அந்நாடு சுகாதாரத்துறை அமைச்சகம் மீண்டும் தேசிய அளவில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படலாம். கொரோனா பரவலை கணக்கில் கொண்டு இந்த முடிவை மேற்கொள்வோம் என்று தெரிவித்துள்ளனர். கொரோனா பரவலை தடுக்கும் முயற்சியில் பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் தோல்வி அடைந்தார் என்ற குற்றச்சாட்டை நாடு முழுவதும் பரவியது.

இந்நிலையில் செப்டம்பர் மாதம் முதல் பள்ளிகள் திறக்கப்பட்டு உள்ளது. அது மட்டுமில்லை நாடு முழுவதும் முழு தளர்வுகள் அளிக்கப்பட்டு பொது இடத்தில் மட்டும் 6 நபருக்கு மேல் கூட தடை விதிக்கப்பட்டுள்ளது.அப்படியிருக்க பிரிட்டனில் இதுவரை 3 லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அது மட்டுமில்லாமல் 40 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பலியாகினர்.

கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து paytm நீக்கம்!

இது வரையில் நோய்க்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கவில்லை என்று உலக நாடுகள் முழுவதும் தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இது வரை உலகம் முழுவதும் 13 கோடி பேருக்கு இந்த பாதிப்பு ஏற்பட்டுள்ளது இலட்சக்கணக்கானோர் உயிரிழந்து உள்ளனர். எனவே நாளுக்கு நாள் பாதிப்பை கருத்திற்கொண்டு மீண்டும் முழுமையாக அமல்படுத்த வாய்ப்புள்ளதாகவும் அந்நாடு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.


Share

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here