Home ஆன்மீகம் எந்த தினங்களில் எந்த தீபம் பலன் கொடுக்கும் ?

எந்த தினங்களில் எந்த தீபம் பலன் கொடுக்கும் ?

1250
0
Deebam
Share

வாரத்தின் ஒவ்வொரு தினங்களிலும் கடவுளுக்கு ஏற்ற தீபங்களை ஏற்றி வழிபாடு செய்தால் வரும் தடைகளும், பிரச்சினைகளும் முழுமையாக மறையும்.
ஞாயிறு: ஞாயிற்றுக்கிழமையில் சுவாமி ஐயப்பனுக்கு 100 தீபங்கள் ஏற்றுவது விசேஷம். தீபங்களைத் தாமரைப் பூ போன்ற வடிவில் ஏற்றுவது மிகவும் சிறப்பு. அதாவது தாமரைப்பூ போன்ற அமைப்பில் தீபங்களை வரிசையாக வைத்து ஏற்ற வேண்டும். ஞாயிற்றுக் கிழமைகளில் செய்யும் இந்த தீப வழிபாட்டிற்குத் தேங்காய்  எண்ணெய் உபயோகிப்பது நல்லது. இதுபோன்று தீபங்கள் ஏற்றி வழிபாடு செய்வதால் வருமானங்கள் தடையை மீறி வருவதற்கு வாய்ப்பு உண்டு.deebam collection
திங்கள்: திங்கட்கிழமை அன்று இலுப்ப எண்ணெய் பயன்படுத்தி 56 தீபங்கள் ஏற்றுவது விசேஷம். இந்த தீபங்களை அன்னப்பறவை  வடிவில் வரிசையாய் வைத்து வழிபட வேண்டும். அன்னப்பறவைகள் போன்ற வடிவில் அரிசி மாவு கோலமிட்டு அவற்றின் மேல் இந்த தீபத்தை ஏற்றினால் மிகவும் சிறப்பானதாகும். மிகவும் துன்பப்படுபவர்களுக்கு  மனச்சாந்தியைத் தரும் வழிபாடு இது.
செவ்வாய்: செவ்வாய்க் கிழமையில், அரிசி மாவுக் கோலமிட்டு, அதில் தீபம் ஏற்ற வேண்டும். அரிசி மாவில் இரட்டைக்கிளி போன்ற உருவம் போட்டு, அதன் மேல் 54 தீபங்களை வரிசையாய் ஏற்றுவது சிறப்பு. இந்த தீபங்களை பசுநெய் பயன்படுத்துவது மிகவும் சிறப்பாகும் இந்த தீப வழிபாட்டின் மூலம் கணவன், மனைவி இடையே அன்பு பெருகும்.
புதன்: புதன்கிழமை அன்று 23 தீபங்கள் ஏற்றி, அரிசி மாவுக் கோலத்தில் இரட்டைச் சங்கு கோலமிட்டு அதன் மேல் சுற்றி தீபங்களை வைக்கலாம்.  நல்லெண்ணெய் தீபங்கள் ஏற்றுவது நல்லது. இவ்வாறு செய்வதால்  குழந்தைகளின் மந்த புத்தி விலகும்.
வியாழன்: வியாழக்கிழமைகளில் தேங்காய் எண்ணெய் பயன்படுத்தி 57 தீபங்கள் ஏற்றி, அரிசி மாவினால் சுதர்சன சக்கர வடிவில் கோலமிட்டு அதைச் சுற்றி இந்த தீபங்களை வைத்து வழிபட வேண்டும். இந்த தீப வழிபாட்டினால் பகைமை கொண்ட உறவினர்கள் மனம் மாறுவார்கள்.
வெள்ளி: வெள்ளிக்கிழமையில் 60 தீபங்கள் ஏற்றுவது சிறப்பு. நெய் தீபமேற்றுதல் மிகவும் நல்லது. மூன்று  வட்டமாகச் சுற்றித் தீபமேற்றுதல் விசேஷம். இவ்வாறு வழிபடுவதன் மூலம் இல்லத்தில் தேவையற்ற செலவுகள் விலகும்.
சனி: சனிக்கிழமைகளில் நல்லெண்ணெய் கொண்டு 80 விளக்குகள் அல்லது மொத்தத்தில் 80 தீப முகங்கள் கொண்ட விளக்குகளை ஏற்றுதல் சிறப்பாகக் கருதப்படுகிறது. இந்த தீபம் பித்ரு சாபங்களை நீக்கும்.

Share

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here