Home செய்திகள் இந்தியா EMI ஒத்திவைப்பு காலத்தை மேலும் நீட்டிக்க சாத்தியமில்லை!…

EMI ஒத்திவைப்பு காலத்தை மேலும் நீட்டிக்க சாத்தியமில்லை!…

311
0
RBI
Share

வங்கி கடன் தவணைகள் ஒத்திவைப்பு காலத்தை 6 மாதத்திற்கு நீட்டிப்பது சாத்தியமில்லை என ரிசர்வ் வங்கி உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

EMI ஒத்திவைப்பு காலத்தை 6 மாதத்திற்கு நீட்டிக்க கோரிய வழக்கில் ரிசர்வ் வங்கி புதிதாக பிரமாணப் பத்திரத்தை தாக்கல் செய்துள்ளது. அதில் வங்கி கடன் தவணைகள் ஒத்திவைப்பு கால அவகாசத்தை மேலும் நீட்டிப்பது, கடனை திருப்பிச் செலுத்தும் ஒழுங்கை பாதிக்கும் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

மேலும் கடன் வழங்கும் முறையை பலவீனப்படுத்தி, வாடிக்கையாளர்கள் மீதான சுமையை அதிகரிக்கச் செய்துவிடும் என கூறப்பட்டுள்ளது.

6 மாத வங்கிக் கடனுக்கான கூட்டு வட்டி தள்ளுபடி?.. மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் கால அவகாசம்!…

கடந்த வாரத்தில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது வட்டி மீதான வட்டி தள்ளுபடி என்ற மத்திய அரசின் திட்டம், பயனாளர்களின் பிரச்சனைகளை தீர்க்க தவறிவிட்டதாக உச்சநீதிமன்றம் தெரிவித்திருந்தது.

ரியல் எஸ்டேட், மின்துறையின் கவலைகளையும் கணக்கில் எடுத்துக் கொள்ளுமாறு உச்சநீதிமன்றம் கூறியிருந்ததோடு, புதிதாக பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யவும் மத்திய அரசுக்கு உத்தரவிட்டிருந்தது.


Share

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here