Home ஆன்மீகம் ஒரே பாறையில் மெய்மறக்கச் செய்யும் எல்லோரா கைலாசநாதர் கோவில் சிறப்புகளும் அம்சங்களும்!..

ஒரே பாறையில் மெய்மறக்கச் செய்யும் எல்லோரா கைலாசநாதர் கோவில் சிறப்புகளும் அம்சங்களும்!..

607
0
kailasa temple
Share

ஒற்றை பாறையால் ஆன 1200 ஆண்டுகள் பழமையான பழங்கால கைலாசநாதர்கோவிலைப் பற்றியும், அதன் வரலாறு மற்றும் சிறப்பம்சங்கள் என்ன என்பதை இப்பதிவில் பார்ப்போம்…

எல்லோரா குகைக் கோயில்

முந்தைய காலத்து மன்னர்கள் ஆட்சியின் பெருமையே அவர்கள் கட்டும் கோவில்கள் தான் அனைத்து நாட்டு மன்னர்களும் போட்டிட்டு கோவில்களை கட்டுவார்கள்.அந்த போட்டியிலும் விதவிதமான சிந்தனைகள் அவர்களுக்கு தோன்றி வித்தியாசமான அமைப்பில் கோவில்களை வடிவமைப்பார்கள்.

பண்டைய காலத்தில் முக்கிய தெய்வமாக சிவனையே வழிபட்டு வந்துள்ளனர்.ஆகையால் சிவனுக்காக பல முக்கியமான கோவில்கள் அமைக்கப்பட்டுள்ளது.அதில் ஒன்றைப் பற்றி இப்போது பார்க்கலாம்.

கைலாசா கோவில் எங்கு அமைந்துள்ளது

மகாராஷ்டிராவில் உள்ள அவுரங்காபாத் நகரிலிருந்து இருபத்தி ஒன்பது கிலோமீட்டர் தொலைவில் 1200 ஆண்டுகள் பழமையான பண்டையக் காலத்து இந்து கோவில் அமைந்துள்ளது.இதனை கைலாசா கோவில் என்று அழைப்பார்கள்.இதனின் முக்கிய தெய்வம் சிவன்.

சிவனை முக்கிய தெய்வமாக கொண்டு கட்டப்பட்ட முப்பத்து நான்கு பெருமை வாய்ந்த கோவில்களில் இது ஒன்றாகும். இதனை எல்லோரா குகை ( Ellora Caves) கோயில் என்று அழைப்பார்கள்.

8 ஆம் நூற்றாண்டில் திராவிட கட்டிடக்கலைக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக இந்த கைலாசா கோவில் அமைந்தது மேலும் இந்த கோவிலை ஒரே பாறையில் செதுக்கியது தான் இதனின் முக்கிய அம்சம் ஆகும்.

விநாயகர் சிலை வைத்து ஊர்வலம் நடத்தினால் கடும் நடவடிக்கை உயர்நீதிமன்றம்..

8ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட அதிசய குகை கோயில்
இராஷ்டிரகூட வம்ச மன்னர்,கிருஷ்ணா என்பவரால் இக்கோவில் கட்டப்பட்டது. ஆறாம் மற்றும் பத்தாம் நூற்றாண்டுகளுக்கு இடையில் இந்திய துணைக் கண்டத்தின் பெரும்பகுதியை ருஷ்டிரகுடா வம்சம் ஆட்சி செய்தது.

இந்த கோயில் கிமு 757 மற்றும் 783 க்கு இடைப்பட்ட காலத்தில் கட்டப்பட்டதாகும். இந்த கோயில் கைலாசா மலையை ஒட்டியவாறு அதனை பார்க்கும் திசையில் அமைக்கப்பட்டிருக்கிறது. இந்து மதத்தின் கூற்றுப் படி சிவன் உண்மையாக இங்கு வசிப்பதாக நம்பப்படுகிறது.

லேசர் கட் தொழில்நுட்பம்

Laser Cut technologyதொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள்,கோவிலில் உள்ள தூண்களின் அடையாளங்களை வைத்து கூறுகையில் இந்த கோவிலை உளியினால் செதுக்கிய அடையாளங்கள் காணப்படுகிறது என்றும் மேலும் இதனை செதுக்க மூன்று வகையான உளிகளை பயன்படுத்தியுள்ளனர் என்றும் கூறியுள்ளனர்.

இந்த கோயில் மேலிருந்து செங்குத்தாக கட்டப்பட்டதாக கூறுகிறார்கள்,இந்த கட்டுமான பணியில் இருந்த முக்கிய கலைஞரால் முன்பக்கத்தில் இருந்து செதுக்குவதில் சிரமம் இருந்திருக்கலாம் என்றும் அதனால் கூட மேலே இருந்து செங்குத்தாக இந்த கட்டிடத்தை கட்டிருப்பார் என்றும் கூறுகிறார்கள்.

இந்த ஒற்றைக்கல் கட்டமைப்பை நிர்மாணிப்பதற்காக 20 ஆண்டு காலத்தில் சுமார் 4000000 டன் நீண்ட பாறைகள் வெளியேற்றப்பட்டன என்று ஆய்வில் கூறுகிறார்கள்.

உடல் ஆரோக்கியத்தை காக்க உதவும் பூசணி விதைகள்!.. அவற்றின் சத்துக்களும் பயன்களும் !…

கைலாச கோயில் கட்டுவதற்கான திட்டம்

கைலாஷ் கோயிலை உருவாக்குவதில் விருபக்ஷ கோயிலின் கட்டடக் கலைஞர்கள் பங்களித்தார்கள் என்று நம்பப்படுகிறது. கட்டடக் கலைஞர்களுக்கு ஏற்கனவே கோயில் கட்டுவதற்கான முழு வடிவமைப்பும் மாதிரியும் தயாராக இருந்திருக்க வேண்டும் என நம்பப்படுகிறது. அதனால் தான் ஒரு மன்னரின் வாழ்நாளில் இதுபோன்ற அளவிலான ஒரு கோவிலைக் கட்டுவதற்கு குறைந்த முயற்சிகள் எடுத்திருக்கிறது என தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

முகலாய ஆட்சியாளர்களில் ஒருவரான ஒளரங்கசீப் கைலாஷ் கோயிலை அழிக்க ஒரு முயற்சியை மேற்கொண்டார், ஆனால் அவர் தனது திட்டங்களில் அதிக வெற்றியைப் பெற முடியவில்லை. அவரால் செய்ய முடிந்ததெல்லாம் இங்கேயும் அங்கேயும் ஒரு சிறிய சேதம்தான். முக்கிய கட்டமைப்பிற்கு எந்த ஒரு சேதத்தையும் ஏற்படுத்த முடியவில்லை.


Share

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here