Home செய்திகள் இந்தியா அதிவேக மொபைல் டேட்டா வழங்கும் நாடுகள் பட்டியலில் இந்தியாவுக்கு எத்தனையாவது இடம் தெரியுமா ?

அதிவேக மொபைல் டேட்டா வழங்கும் நாடுகள் பட்டியலில் இந்தியாவுக்கு எத்தனையாவது இடம் தெரியுமா ?

1687
0
Share

உலகளவில் ஸ்மார்ட்போன் பயனர்கள் அதிகம் கொண்ட நாடு இந்தியா. உலகின் மற்ற நாடுகளில் இருப்பதை விட இந்தியாவில் மொபைல் டேட்டாவுக்கான கட்டணமும் மிக குறைவு. ஆனால் அதிவேக இன்டர்நெட் வழங்குவதில் இந்தியா சிறப்பாக இல்லை என பல்வேறு கூற்று பரவலாக குற்றம் சாட்டப்படுகிறது.

தற்போது இன்டர்நெட் வேகம் குறித்த வெளியாகி இருக்கும் ஆய்வு அறிக்கையின் படி சர்வதேச சந்தையில் அதிவேக மொபைல் டேட்டா வழங்கும் நாடுகள் பட்டியலில் இந்தியா 131-வது இடத்தில் உள்ளது. தென் கொரியா, இலங்கை, நேபால் மற்றும் பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளை விட இந்தியாவில் மொபைல் டேட்டா வேகம் குறைவு ஆகும்.

ஆய்வு நிறுவனமான ஊக்லா வெளியிட்ட தகவல்களின் படி செப்டம்பர் மாதத்தில் இந்திய சந்தையில் மொபைல் டேட்டா டவுன்லோட் வேகம் சராசரியாக 12.07Mbps ஆக இருந்து வருகிறது. சர்வதேச அளவில் மொபைல் டேட்டா வேகம் சராசரியாக 35.06Mbps ஆக இருக்கிறது.

அதிவேக மொபைல் டேட்டா வழங்கும் நாடுகள் பட்டியலில் நேபால், பாகிஸ்தான் மற்றும் இலங்கை உள்ளிட்ட நாடுகள் முறையே 102, 116 மற்றும் 117-வது இடங்களை பிடித்துள்ளது.

ஆப்கானில் இருந்து ஒரு லட்சம் டன் வெங்காயம் இறக்குமதி..

பிராட்பேண்ட் வேகத்தை பொருத்தவரை இந்தியா 70-வது இடத்தில் உள்ளது. இந்தியாவில் பிராட்பேண்ட் டவுன்லோட் வேகம் சராசரியாக 46.47Mbps ஆக இருக்கிறது.


Share

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here