Home செய்திகள் இந்தியா மாஸ்டர் படத்துடன் இத்தனை படங்கள் மோதுகின்றதா ?

மாஸ்டர் படத்துடன் இத்தனை படங்கள் மோதுகின்றதா ?

1190
0
Master movie
Share

கொரோனா பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு அறிவிக்கப்பட்டது இதனால் அனைத்து தொழில் துறைகளும் மூடப்பட்டது. திரையரங்குகள்,பொழுதுபோக்கு இடங்களும் மூடப்பட்டன. ஆனால் பொதுமக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டும், நாட்டின் பொருளாதார நிலையை கருத்தில் கொண்டும் ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டது. இந்த தளர்வுகளில் அக்டோபர் 15-ம் தேதி முதல் திரையரங்குகள் திறக்கப்படலாம் என்று மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டது. பல்வேறு மாநிலங்களில் திரையரங்குகள் திறக்கப்பட்டது. ஆனால் தமிழகத்தில் இன்னும் திரையரங்குகள் திறப்பது குறித்து முடிவு வெளியிடப்படவில்லை.

6 மாதத்துக்கு மேலாக திரையரங்குகள் மூடப்பட்டிருப்பதால் திரையரங்கு உரிமையாளர்களும் ஊழியர்களும் பொருளாதார ரீதியாக பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் தியேட்டர்களை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதல்வரை சந்தித்து கோரிக்கை வைத்திருக்கும் திரையரங்க உரிமையாளர்களுக்கு அரசு தரப்பில் விரைவில் நல்ல செய்தி கிடைக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் அடுத்த மாதம் வரவிருக்கும் தீபாவளி பண்டிகைக்கு சூரரைப்போற்று, மூக்குத்தி அம்மன் உள்ளிட்ட சில பெரிய படங்கள் ஓடிடி தளத்தில் ரிலீசாகின்றது. இருப்பினும் அடுத்த மாதம் தியேட்டர்கள் திறக்கப்பட்டாலும் பழைய படி மக்கள் கூட்டம் வர சில நாட்களாவது ஆகும். எனவே விஜய்யின் மாஸ்டர், கார்த்தியின் சுல்தான் ஆகிய திரைப்படங்களை பொங்கலுக்கு திரைக்கு கொண்டு வர பணிகள் வேகமாக நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

மேலும் சுசீந்திரன் இயக்கத்தில் சிம்பு நடிக்கும் ‘ஈஸ்வரன்’ திரைப்படமும் பொங்கலுக்கு ரிலீசாக இருப்பதை உறுதி செய்துள்ளது அந்த படக்குழு.

ஆயுத பூஜை எப்படி கும்பிட வேண்டும் தெரியுமா ?

கார்த்தியின் சுல்தான், சிம்புவின் ஈஸ்வரன் ஆகிய திரைப்படங்கள் பொங்கலுக்கு ரிலீசாக செய்யப்பட்டால் மாஸ்டர் உடன் நேரடியாக மோதும் சூழல் உருவாகும்.


Share

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here