Home செய்திகள் இந்தியா எல்லையில் பதற்றத்தை ஏற்படுத்த கூடாது ! சீனாவிற்கு இந்தியா…

எல்லையில் பதற்றத்தை ஏற்படுத்த கூடாது ! சீனாவிற்கு இந்தியா…

388
0
india china
Share

இந்தியா சீனா எல்லை இடையே பெரும் பிரச்சினை நிலவி வருகிறது. இதற்காக பல கட்ட பேச்சுவார்த்தையும் நடைபெற்று வருகிறது. ஆனால் அமைதி நிலவிய வாரில்லை. இதற்காக தற்போது ஆறாம் கட்ட பேச்சுவார்த்தை ராணுவ கமாண்டர்கள் இடையில் நடைபெற்று உள்ளது.

இந்த ஆறாம் கட்ட பேச்சுவார்த்தையில் இந்தியா-சீனா இடையேயான ராணுவ கமாண்டர்கள் பங்கேற்றனர். அது மட்டுமில்லாமல் வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர்களும் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

சுவையான ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா வீட்டிலேயே செய்யலாம்..

அதில் கலந்து கொண்ட இந்திய வெளியுறவு செய்தித் தொடர்பாளர் அனுராக் ஸ்ரீவத்சவா பத்திரிக்கையாளர்களை சந்தித்து கூறியிருப்பதாவது :

ராணுவ கமாண்டர்கள் இடையே நடைபெற்ற இந்த பேச்சுவார்த்தையில் லடாக் எல்லையில் எந்தவித பதற்றமும் ஏற்படுத்தக்கூடாது. மேலும் படைகளை திரும்பப் பெற வேண்டும் என்பது குறித்து தான் முக்கியமாக பேசபட்டிருந்தது. எல்லையில் பதற்றம் ஏற்படுத்தும் நடவடிக்கையிலும் ஈடுபடக் கூடாது தற்போதுள்ள நிலையே நீடிக்க வேண்டும் அதை மாற்ற முயற்சிக்க கூடாது என்று சீனாவிடம் உறுதியாக நம் நாட்டு கமாண்டர்கள் தெரிவித்துள்ளதாக கூறினார்.


Share

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here