Home ஆன்மீகம் சபரிமலை மண்டல பூஜைக்குப் பக்தர்கள் அனுமதி ! ஆனால் அனைவருக்கும் அல்ல…

சபரிமலை மண்டல பூஜைக்குப் பக்தர்கள் அனுமதி ! ஆனால் அனைவருக்கும் அல்ல…

377
0
Share

கேரளாவில் பிரசித்தி பெற்ற ஐயப்பன் கோவிலில் நவம்பர் மாதம் நடக்கும் மண்டல பூஜையும், ஜனவரி மாதம் நடக்கும் மகர விளக்குப் பூஜையும் சிறப்பு மிக்கது. இதற்காக அண்டை மாநிலங்களிலிருந்தும் ஒரு சில நாடுகளிலிருந்தும் ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வந்து ஐயப்பனைத் தரிசித்துச் செல்வர்.

அதன்படி வரும் மண்டல பூஜை மற்றும் மகர விளக்குப் பூஜையில் பங்கேற்க நாடு முழுவதும் லட்சக்கணக்கானோர் கூடினால் பரவ வாய்ப்புள்ளது என்று மருத்துவர்கள் அடங்கிய குழுவுடன் ஆலோசனை நடத்தினர். மேலும் என்னென்ன கட்டுப்பாடுகளை விதிக்கலாம் எப்படி கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த முடியும் என்றும் இந்த கூட்டத்தில் ஆலோசித்தனர்.

ரியல்மியுடன் போட்டி போடும் ஹானர் ! என்ன வெளியிடுகிறார்கள் தெரியுமா ?

அதில் முதலாவதாக அண்டை மாநிலங்களான தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திர மாநில இருந்து ஏராளமான பக்தர்கள் வருவார்கள். அவ்வாறு வரும்போது ஏற்கனவே கொரோனா பாதித்தவரும் வர நேரிடும் லட்சக்கணக்கானோர் வருவதால் சமூக இடைவெளி போன்ற முக்கிய கட்டுப்பாடு விதிகள் கடைப்பிடிப்பது கடினம். மேலும் இதில் பக்தர்களுக்கு நோய் பரவாமல் தடுக்கவும், கட்டுப்படுத்தவும் வேண்டும்.SABARIMALA

எனவே இஸ்லாமியர்களின் புனித ஹஜ் பயணத்தில் இந்தாண்டு குறைவான இஸ்லாமியர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது. அதே முறையை இங்கு நடைமுறை பயன்படுத்தினால் நோய் பரவலைக் கட்டுப்படுத்த முடியும் என்று மருத்துவர்கள் கூறினர்.

குழுவிலிருந்த டாக்டர் ராஜசேகரன் நாயர் இது குறித்து பத்திரிகையாளர்களிடம் கூறியபோது :
சபரிமலை மண்டல பூஜை மற்றும் மகர விளக்குப் பூஜைக்குப் பக்தர்கள் எண்ணிக்கையைக் கட்டுக்குள் வைத்தல் வேண்டும் என்று அறிவுறுத்தி உள்ளோம். எங்கள் தரப்பிலிருந்து 5 ஆயிரம் பக்தர்களை மட்டும் தரிசிக்க அனுமதிக்கலாம் என்று அறிந்து வைத்துள்ளோம். விரைவில் தெளிவான முடிவு அரசிடமிருந்து வெளியாகும் என்று கூறினார்.


Share

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here