Home ஆன்மீகம் ஜூன் 3 வரை திருப்பதியில் பக்தர்கள் தரிசனம் ரத்தா ? தேவஸ்தான தரப்பில் விளக்கம்…

ஜூன் 3 வரை திருப்பதியில் பக்தர்கள் தரிசனம் ரத்தா ? தேவஸ்தான தரப்பில் விளக்கம்…

443
0
Tirupathi
Share

திருப்பதி பெருமாள் கோவிலில் ஜூன் 30 வரை பக்தர்களுக்குத் தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது.இந்த தகவல் குறித்து தேவஸ்தானம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
கொரோனா பரவுதலைத் தடுக்க அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கையொட்டி மார்ச் 21-ந்தேதி முதல் திருப்பதியில் சாமி தரிசனம் ரத்து செய்யப்பட்டது.Tirupati
ஆனால் ஆன்மிக சாஸ்திரப்படி சாமிக்குப் பூஜைகள் நடந்து வருகிறது. திருப்பதி கோவில் வரலாற்றில் இதுவரை இத்தனை நாட்கள் சாமி தரிசனம் ரத்து செய்யப்பட்டதில்லை.
மேலும் ஏழுமலையானை மீண்டும் தரிசிப்பதற்காகப் பக்தர்கள் ஆவலுடன் உள்ளனர். தற்போது திருப்பதி கோவிலில் ஜூன் 30-ந்தேதி வரை பக்தர்களுக்குத் தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக சமூக வலைத்தளங்களில்  வேகமாகப் பரவி வருகிறது.
இதற்குத் திருமலை- திருப்பதி தேவஸ்தானம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

சபரிமலையில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை கேரள அரசு திட்டவட்டம் !

சாமி தரிசனம் செய்யப் பக்தர்கள் மீண்டும் அனுமதிப்பது குறித்து அறங்காவலர் குழுவில் ஆலோசனை செய்த  பிறகு முடிவு செய்யப்படும். அதுவரை இதுபோன்ற பொய்யான தகவல்களைப் பக்தர்கள் யாரும் நம்ப வேண்டாம் என  வேண்டுகோள் விடுத்துள்ளது.

Share

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here