Home செய்திகள் இந்தியா மீண்டும் ஊரடங்கு ஆகஸ்ட் 31 வரை! முதல்வர் அறிவிப்பு

மீண்டும் ஊரடங்கு ஆகஸ்ட் 31 வரை! முதல்வர் அறிவிப்பு

319
0
EPS
Share

உலகம் முழுவதும் கடந்த மார்ச் முதல் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த ஊரடங்கு அமலிலிருந்தது. அதைத் தொடர்ந்து சில நாடுகள் கொரோனா பாதிப்பு குறைந்ததால் ஊரடங்கை நீக்கின. இதே போல் தமிழகத்தில் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு பல கட்டங்களாக நீடித்து நாளை முடிவடையும் நிலையில் உள்ளது, அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து நேற்று தலைமைச் செயலகத்தில் இருந்தபடி காணொளி காட்சி மூலம் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை செய்தார்.

அதன் பிறகு, இன்று மருத்துவ நிபுணர்கள் குழுவுடன் ஆலோசனை நடத்தினார். இதைத் அடுத்து, பத்திரிக்கையாளர்களைச் சந்தித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, களப் பணியாளர்களின் போராடி சென்னையில் கொரோனா வைரசைக் கட்டுக்குள் கொண்டு வந்துள்ளது.

ஆனால் தற்போது நாளுக்கு நாள் சென்னையைத் தவிர்த்துப் பிற இடங்களில் பரவல் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. சென்னையைப் போல் தமிழகத்தில் பிற மாவட்டங்களிலும் தொற்று படிப்படியாகக் குறைக்க மருத்துவ நிபுணர்களின் கருத்துக்கு மிக முக்கியம் எனவே தமிழக அரசு அவர்கள் வழிகாட்டுதல் படி செயல்படுகிறது. மருத்துவ நிபுணர்களின் கருத்து அடிப்படையில் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் நேற்று தெரிவித்திருந்தார்.

தற்போது முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிக்கையில், தமிழகத்தில் 31.7.2020 முடிய ஊரடங்கு உத்தரவு தொடர்ந்து நீட்டிக்கப்படுகிறது. ஆயினும், ஏழை எளிய மக்களின் வாழ்வாதாரத்தைக் கருத்தில் கொண்டும், பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் முயற்சியிலும், சென்னை காவல்துறையின் எல்லைக்குட்பட்ட பகுதிகள் மற்றும் தமிழ்நாட்டின் பிற பகுதிகளில் பல்வேறு பணிகளுக்கு சில கட்டுப்பாடு வரைமுறைகளுடன் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இதில் ஆகஸ்ட் மாதத்தில் உள்ள எல்லா ஞாயிற்றுக்கிழமைகளிலும் எவ்வித தளர்வுகளும் இன்றி, தமிழ்நாடு முழுவதும் முழு ஊரடங்கு இப்போது போலவே அமல்படுத்தப்படும்.

இதுவரை கடைப்பிடிக்கப்பட்ட நடைமுறைப்படி, மாவட்ட ஆட்சித் தலைவரிடம் முறைப்படி இ-பாஸ் பெற பிறகே மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல, வெளி மாநிலங்களிலிருந்து தமிழ்நாட்டிற்கு வர அனுமதிக்கப்படும்.ஆனால் மத்திய அரசு நேற்று இ- பாஸ் அவசியமில்லை என்று அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

தற்போது 50% பணியாளர்களுடன் இயங்கி வரும் அனைத்து தொழில் சார்ந்த நிறுவனங்களும், 75% பணியாளர்களுடன் செயல்பட அனுமதி அளிக்கப்படும்.

காய்கறி கடைகள், மளிகைக் கடைகள் போன்ற அத்தியாவசிய தேவைகளுக்குக் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை இயங்க அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது இக்கடைகள் செயல்படும் நேரம் காலை 6 மணி முதல் இரவு 7 மணி வரை இயங்க அனுமதிக்கப்படுகிறது.

ஏற்கனவே காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை இயங்கி வந்த மற்ற கடைகள், தற்போது காலை 10 மணி முதல் மாலை 7 மணி வரை இயங்க அனுமதிக்கப்பட்டுள்ளது.
இரயில் மற்றும் விமான போக்குவரத்தைப் போன்ற பொதுப் போக்குவரத்திற்கு தற்போதுள்ள கட்டுப்பாடுகள் தொடரும்.

தமிழ்நாடு முழுவதும் ஆகஸ்ட் 15ம் தேதி, சுதந்திர தின விழா மத்திய அரசின் வழிகாட்டுதல்களின்படி, சமூக இடைவெளி, முககவசம் அணிதல் போன்றவற்றுடன் கொண்டாடப்படும்.


Share

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here