Home செய்திகள் இந்தியா உலகத்தில் 10% பேருக்கு கொரோனா பாதிப்பு -உலக சுகாதார அமைப்பு

உலகத்தில் 10% பேருக்கு கொரோனா பாதிப்பு -உலக சுகாதார அமைப்பு

332
0
Share

உலக சுகாதார அமைப்பின் ஆலோசனைக் கூட்டம் அதன் தலைமையகமான ஜெனிவாவில் நேற்று நடைபெற்றது.

இதில் உலக சுகாதார அமைப்பின் அவசர திட்ட செயல் இயக்குநர் மைக்கேல் ரையான் பேசியதாவது:

எங்களது கணிப்பின்படி உலக மக்கள் தொகையில், 10 சதவீதம் பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருக்கலாம். அதாவது உலக மக்கள் தொகை 760 கோடி. அதில் 76 கோடி பேர் வைரசால் பாதிக்கப்பட்டிருக்கலாம். ஆனால், உலகம் முழுவதும் இதுவரை 3 கோடியே 55 லட்சம் பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

உலக சுகாதார அமைப்பின் அவசர திட்ட செயல் இயக்குநரே, ‘உலக மக்கள் தொகையில் 10 சதவீதம் பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருக்கலாம்’ எனத் தெரிவித்திருப்பது பல்வேறு தரப்பினரையும் அதிர்ச்சியடையச் செய்துள்ளது.


Share

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here