Home செய்திகள் இந்தியா அமேசான் டெலிவரியில் எழும்பும் புகார்கள்

அமேசான் டெலிவரியில் எழும்பும் புகார்கள்

1295
0
Share

அமேசான் ஆன்லைன் விற்பனை தளத்தில் நவராத்திரி சிறப்பு விற்பனை சமீபத்தில் நடைபெற்றது. இந்த விற்பனையில் அசத்தலான அதிரடி சலுகைகளை வாடிக்கையாளர்களுக்கு அள்ளி வழங்கியது. இந்நிலையில், ஷாப்பிங் செய்த பலர் மகிழ்ச்சியடைந்தனர், ஆனால் வடிக்கையாளர்களில் சிலருக்கு ஆன்லைன் ஷாப்பிங் மூலம் பெரும் கவலையை ஏற்படுத்தி உள்ளது.

டெல்லியை சேர்ந்த நபர் ஒருவர் தனது பழைய மொபைல் போனை எக்சேன்ஜ் செய்து புதிதாக ரெட்மி 8ஏ டூயல் ஸ்மார்ட்போன் வாங்க அமேசான் தளத்தில் சிறப்பு விற்பனையில் ஆர்டர் செய்துள்ளார்.

அதன்படி அவரது பழைய மொபைல் போனை கொடுத்து புதிய போன் அடங்கிய பார்சலை டெலிவரி ஊழியரிடம் இருந்து பெற்றுக் கொண்டார். பின் தனது பார்சலை திறந்தவர் அதனுள் இருந்த ரின் சோப்பை கண்டு அதிர்ந்து போனார். தனக்கு ஏற்பட்ட நிலையை முதலில் அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டார்.

இவரது இந்த ட்விட்டர் பதிவுக்கு பதில் அளித்த அமேசான் நிறுவனம் வாடிக்கையாளருக்கு ஏற்பட்ட பிரச்சினையை 4 முதல் 5 நாட்களுக்குள் தீர்வு செய்து தருவதாக வாக்குறுதி அளித்துள்ளது.

அமேசான் நிறுவனத்தில் இது போன்ற குற்றச்சாட்டுகள் தொடர்ந்து வருகிறது. இதற்கு அமேசான் நிறுவனம் ஒரு நல்ல முடிவை எடுக்க வேண்டும் என்று வாடிக்கையாளர்கள் தரப்பில் கோரிக்கை எழுந்துள்ளது.


Share

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here