Home செய்திகள் இந்தியா லடாக் எல்லைக்குள் வந்த சீன ராணுவ வீரர்! இந்திய ராணுவம் என்ன செய்தது தெரியுமா..

லடாக் எல்லைக்குள் வந்த சீன ராணுவ வீரர்! இந்திய ராணுவம் என்ன செய்தது தெரியுமா..

419
0
china meet india
Share

லடாக் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் ஜூன் 15ஆம் தேதி இந்திய ராணுவதிற்கும் சீனா ராணுவத்திற்கும் இடையே ஏற்பட்ட மோதலில் இந்திய ராணுவ வீரர்கள் 20 பேர் வீரமரணம் அடைந்தனர். சீன தரப்பிலும் 35 ராணுவ வீரர்கள் பலியானதாக அமெரிக்க உளவுத் துறை தெரிவித்தது. ஆனால் அதனை சீனா தொடர்ந்து மறுத்து வந்தது.

அது மட்டுமில்லாமல் சீனா – இந்தியா இடையே தொடர்ந்து வாக்குவாதங்கள் நீடித்து வந்தது. இதனால் மத்திய அரசை சீன நாட்டுடன் தொடர்புடைய மொபைல் போன் செயலிகளை இந்தியாவில் பயன்படுத்த தடை விதித்தது. இது ஒரு பக்கம் சீனாவிற்கு கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதனால் தொடர்ந்து இருதரப்பு இடையே போர் மூளும் அபாயம் இருந்தது. எனவே இரு தரப்பினரும் எல்லைப் பகுதியில் ராணுவ வீரர்களை குவித்தனர். இதன் பிறகு பல கட்ட பேச்சுவார்த்தைக்கு பின்னர் ராணுவத்தை பின் வாங்க முடிவு செய்தனர். இருப்பினும் இன்னும் எல்லை பிரச்சனை விவகாரம் முடிவுக்கு வராததால் தொடர்ந்து ராணுவ வீரர்கள் எல்லை பகுதியில் பாதுகாத்து வருகின்றனர்.

கூகுள் புதிய தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்ய உள்ளது.. 

இந்நிலையில் லடாக்ககில் சீன ராணுவ வீரர் ஒருவர் இந்திய ராணுவத்தால் சிறை பிடிக்கப்பட்டுள்ளார். அவர் தவறுதலாக இந்திய எல்லைக்குள் நுழைந்து இருக்க வாய்ப்புள்ளது என்று விசாரணைக்குப் பிறகு இந்திய ராணுவ வீரர்கள் தெரிவித்துள்ளனர். எனவே இந்திய ராணுவம் கடைபிடிக்கும் நெறிமுறைகள் படி சீன ராணுவத்திடம் மீண்டும் பிடிபட்ட வீரரை ஒப்படைக்க வேண்டும் என்று பரவலாக ராணுவ வட்டாரத்தில் கூறப்பட்டுள்ளது


Share

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here