Home அறிவியல் சந்திராயன் -3, ககன்யான் திட்டம் இல்லை ! இஸ்ரோ தலைவர் கே.சிவன் அறிவிப்பு…

சந்திராயன் -3, ககன்யான் திட்டம் இல்லை ! இஸ்ரோ தலைவர் கே.சிவன் அறிவிப்பு…

405
0
ISRO
Share

கொரோனா வைரஸ் காரணமாகப் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கினால் இஸ்ரோவின் மிக முக்கிய 10 திட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளது என இஸ்ரோவின் தலைவர் கே சிவன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக இவர் பிடிஐ செய்தி நிறுவனத்துக்குப் பேட்டியளித்துள்ளார் :
கொரோனா காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதனால் இஸ்ரோவின் பெரும்பாலான முக்கிய பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. பாதிக்கப்பட்டுள்ள பணிகளின் மதிப்பு கொரோனா முடிந்த பிறகு தான் தெளிவாகக் கூற இயலும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அதிலும் ககன்யான் மற்றும் சந்திராயன் 3 போன்ற மிக முக்கிய திட்டங்கள் மிகுந்த பின்னடைவைச் சந்தித்துள்ளன.
இந்த ககன்யான் திட்டம் பல்வேறு பிரிவாகப் பிரிக்கப்பட்டுச் செயல்படுத்தப்பட்டு வந்தது. அதில் ஒரு சில பிரிவுகள் இன்னும் எந்த வேலைகளும் தொடங்கப்படவில்லை. இதே போல் சந்திராயன் – 3 திட்ட பணிகளும் பெரும் பாதிப்பில்  உள்ளது.
கடந்த ஆண்டு சந்திராயன் -2 வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. இந்த ஆண்டு இறுதியில் சந்திராயன் -3 செயல்படுத்த திட்டமிடப்பட்டிருந்தது. இந்த ஊரடங்கு காரணமாக அது சாத்தியமில்லை என்று முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
ISROஏனென்றால் கொரோனா பரவலால் அமல்படுத்தப்பட்டுள்ள உறங்கினால் ராக்கெட் மற்றும் செயற்கைக்கோள் தயார் செய்யத் தேவையான சில முக்கிய உதிரி பாகங்கள் தனியார் நிறுவனத்திடம் இருந்து தான் பெறப்படுகிறது.
இந்த ஊரடங்கினால் அனைத்து சிறு குறு தொழில்கள் பாதிக்கப்பட்டுள்ளன. எனவே இஸ்ரோவிற்கு தேவையான அனைத்து உபகரணங்களும், உதிரி பாகங்களும் கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதனால் சந்திராயன் 3 திட்டம்
இந்த ஆண்டு இறுதியில் செயல்படுத்த முடியாது  என்று தெரிவித்துள்ளார்.
இது போல் அனைத்து இஸ்ரோவின் 10 திட்டங்கள் பெரும் பாதிப்பைச் சந்தித்துள்ளதாக இஸ்ரோவின் தலைவர் கே.சிவன் தெரிவித்துள்ளார்.

Share

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here