Home முகப்பு உலக செய்திகள் பிரிட்டன் ஆராய்ச்சியாளர்கள் அசத்தல்!.. ஒன்றரை மணி நேரத்தில் கொரோனாவை கண்டுபிடிக்கும் கருவி!…

பிரிட்டன் ஆராய்ச்சியாளர்கள் அசத்தல்!.. ஒன்றரை மணி நேரத்தில் கொரோனாவை கண்டுபிடிக்கும் கருவி!…

393
0
Britain Nudge
Share

ஒருவருக்கு கொரோனா இருக்கா இல்லையா என்பதை ஒன்றரை மணி நேரத்தில் கண்டுடிபிடிக்கும் கருவியை பிரிட்டன் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

கொரோனா தொற்றால் உலக மக்கள் ஏராளமானோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்தியாவில் ஒவ்வொரு நாளும் பாதிப்புக்கு ஆளாவோர் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதுவும் பரிசோதனை செய்ய சென்றால் ஒரிரு நாள் கழித்தே கொரோனா உள்ளதா இல்லையா என்று முடிவு தெரியவருகிறது.

ரஷ்யாவின் கொரோனா மருந்தை பயன்படுத்தலாமா?.. தடுப்பூசியை வாங்கலமா ஆலோசனையில் இந்தியா!…

இந்த நிலையில் ஒருவருக்கு கொரோனா இருக்கா இல்லையா என்பதை ஒன்றரை மணி நேரத்தில் கண்டுபிடிக்கும் கருவியை பிரிட்டன் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். ரொட்டி டோஸ்டர் போல உள்ள அந்த கருவியில் நோயாளிகளின் சளி, இருமல் மாதிரியை தந்தால் போதுமானது.

ஒன்றரை மணி நேரத்தில் துல்லியமாக சொல்லிவிடும், நோயாளிகள் மேலும் அதிக நேரம் காத்திருக்க தேவையில்லை என்று கருவியை கண்டுபிடித்த ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர். இந்த கருவிகளை முதற்கட்டமாக பிரிட்டன் அரசு வாங்கவுள்ளது.

இந்த கருவியை உருவாக்கிய டி.என்.ஏ நட்ஜ் நிறுவனம் முதலில் பிரிட்டன் அரசுக்கு 5 ஆயிரம் கருவிகளை வழங்கவுள்ளது. இதற்கான ஒப்பந்தத்தின் மதிப்பு ரூ.1500 கோடியை தாண்டுகிறது என்பது குறிப்பிடதக்கது.


Share

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here