Home செய்திகள் இந்தியா ஊரடங்கிலும் மாஸ் குறையாத தளபதி விஜய் பிறந்தநாள் ! ட்ரெண்ட் ஆகும் #hbdthalapathy ஹாஷ்டாக் 

ஊரடங்கிலும் மாஸ் குறையாத தளபதி விஜய் பிறந்தநாள் ! ட்ரெண்ட் ஆகும் #hbdthalapathy ஹாஷ்டாக் 

1559
0
Share

இன்று ( ஜுன் 22 ) தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமும். பல குடும்பங்களில் உள்ளத்தைக் கொள்ளை அடித்த நடிகருமான தளபதி விஜய் அவர்களுக்கு 46வது பிறந்தநாள்.
ஒவ்வொரு ஆண்டும் இவர் பிறந்த நாள் அன்று ரசிகர்கள் மிகுந்த ஆரவாரத்துடன் கொண்டாடுவர். தற்போது ஊரடங்கு என்பதால் கொண்டாட்டம் சற்று குறைவாக இருக்கும் என்று எண்ணியிருந்த நிலையில்   சமூகவலைத்தளங்களில் இவரை வீழ்த்த இதுவரை ஆளே இல்லை.
ஏனென்றால் இவர் பிறந்த நாளை முன்னிட்டு #hbdthalapathy என்ற ஹாஷ்டாக் பயங்கர ட்ரெண்டாகி வருகிறது. அது மட்டுமன்றி OTT  தளங்களிலும் இவருடைய படங்களுக்குப் பஞ்சமில்லாமல் உள்ளது.
பேஸ்புக், இன்ஸ்டாகிராம், டிக் டாக் என சமூகவலைத்தளங்கள் அனைத்திலும் பாட்டுப் பாடியும், நடனமாடியும், ஓவியங்கள் வரைந்து அனைத்து துறையினரும் விஜய்க்கு வாழ்த்து தெரிவிக்கும் வண்ணம் ட்ரிப்யூட் செய்து வருகின்றனர்.
அதுமட்டுமின்றி பல வீடியோக்களை எடுத்து அதனை மிக்ஸிங் செய்து mash up- செய்தும் வருகின்றனர் இவரது ரசிகர்கள்.
திரைத் துறையில் இவருக்கு ஏராளமான ஏற்றத்தாழ்வுகள் வந்த போதும் இவருடைய ரசிகர்கள் இவருக்குப் பக்கபலமாய் நின்று இதுநாள் வரை தாங்கி வருகின்றனர்.
இதைச் சித்தரிக்கும் போட்டோ தற்போது வைரலாகி வருகிறது. இவர் பிறந்தநாளை முன்னிட்டு சில ட்ரெண்டிங் போட்டோஸ் :
viajy

Share

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here