Home ஆன்மீகம் பிறந்த தேதி பலன்கள்..

பிறந்த தேதி பலன்கள்..

952
0
Jothidam
Share

பிறந்த தேதியை வைத்து அவருக்கு உள்ள பலன்கள் பற்றி விளக்கமாக கீழே தெளிவாக கொடுக்கபட்டுள்ளது.

1,10,19,28

  • பொறுப்புகள் சற்று அதிகமானலும் அதற்கான பலன்கள் கிட்டும்.
  • உறவினர்கள் மத்தியில் புகழ், பாராட்டு கிடைக்கும்.
  • வேலை இடத்தில் அதிகாரிகளிடம் மதிப்பு கிடைக்கும்.
  • கடந்த கால முயற்சிக்கான பலன் வந்தடையும்.
  • நேர்மையற்ற நண்பர்களை கண்டு விலகுவீர்கள்.

2,11,20,29

  • முன்னேற்றத்தில் ஏற்பட்ட தடைகள் விலகும்.
  • பெற்றோரின் ஆலோசனை மூலம் நன்மை காண்பீர்.
  • நண்பர்களின் வழியில் பெரிய உதவி கிடைக்கும்.
  • உறவினர் மூலம் சுபச் செலவு ஏற்படும்.
  • எதிர்பார்க்காத வகையில் வெளிநாட்டுப் பயணம் உறுதியாகும்.

எப்படிபட்ட குணம் கொண்டவர் நீங்கள் என்று அறிய வேண்டுமா ?

3,12,21,30

  • அலுவலகத்தில் ஏற்பட்ட பிரச்னை விலகும்.
  • சவால்களில் சாமர்த்தியமாக பாராட்டுப் பெறுவீர்கள்.
  • ஆடை, ஆபரணத்தால் மற்றவர் கவனம் ஈர்ப்பீர்.
  • சுற்றுலா வெளிநாடு பயணம் மேற்கோள்வீர்கள்.
  • பெண்களுக்கு வெளிநாட்டில் மாப்பிள்ளை அமைவர்.

4,13,22,31

  • மனம், உடலில் புத்துணர்ச்சி மேலோங்கும்.
  • பெரிய மனிதர்களின் அறிமுகம் நன்மை பயக்கும்.
  • தாயாரின் உடல்நிலை நன்றாக இருக்கும்.
  • திருமண முயற்சியில் நல்ல முடிவு எடுப்பீர்கள்.
  • குடும்பத்தினரின் நலனில் கூடுதல் கவனம் தேவை.
  • வேலையில் பொறுப்பு அதிகரிக்கும். வருமானமும் மேலோங்கும்.

5,14,23

  • ஆடை, ஆபரணம் விரும்பி வாங்குவீர்கள்.
  • நல்ல காரியத்தில் நீடித்த இழுபறி விலகும்.
  • உடல்நிலையில் கவனம் தேவை.
  • நண்பர்களால் லாபமும், நன்மையும் கிட்டும்.
  • உங்கள் பேச்சால் பதவி, சம்பள உயர்வு பெறுவீர்.

6,15,24

  • புதிய வாகனங்கள் வாங்க வாய்ப்புள்ளது.
  • தடை ஏற்பட்ட பின்பே பணி முடியும்.
  • கற்பனை சார்ந்த துறைகளில் கவனம் அதிகரிக்கும்.
  • திரைத்துறையில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் கிட்டும்.
  • அக்கம்பக்கத்தினரிடம் கவனம் அவசியம்.
  • பிள்ளைகள் நற்செயலில் ஈடுபட்டு பெருமை தேடித் தருவர்.

7,16,25

  • முன்கோபத்தை கட்டுப்படுத்தி கொள்வது நல்லது.
  • பிள்ளைகளின் எதிர்காலம் குறித்து சிந்திப்பீர்கள்.
  • பிறரின் குற்றங்களை சுட்டிக் காட்ட வேண்டாம்.
  • அலுவலகத்திலோ, உறவினர் மத்தியிலோ அனுசரனையுடன் நடந்து கொள்ளுங்கள்.
  • புதிய நண்பர்கள் மூலம் உற்சாகமடைவீர்.
  • உறவினர்கள் நண்பர்கள் மத்தியில் மதிக்கப்படுவீர்.

8,17,26

  • பொழுது போக்கினால் கவனம் சிதறும்.
  • உறவினர், குடும்பத்தினருடன் சுற்றுலா செல்ல திட்டமிடுவீர்.
  • வெளிநாட்டில் இருந்து நல்ல செய்தி வரும்.
  • பொறுப்பிலிருந்து நழுவினாலும் பளு அதிகரிக்கும்.
  • எந்த விஷயத்திலும் கவனமாய்ச் செயல்படுங்கள்.
  • மற்றவருக்கு மருத்துவச் செலவு செய்ய நேரிடும்.

9,18,27

  • பணியில் திறமையை வெளிப்படுத்தி நற்பெயர் காண்பீர்.
  • சொத்து வாங்க எடுத்த முயற்சி வெற்றிகரமாக முடியும்.
  • வீடு, வாகன வகையில் திடீர் செலவு ஏற்படும்.
  • உறவினரிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு தீரும்.
  • புதிய விஷயங்களை கற்பதில் ஆர்வம் காட்டுவீர்கள்.
  • பணியில் தைரியமாக முடிவுகள் மேற்கோள்வீர்கள்.

Share

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here