Home செய்திகள் இந்தியா பலரை கவலை கொள்ளச் செய்த பில்கேட்ஸ்..

பலரை கவலை கொள்ளச் செய்த பில்கேட்ஸ்..

488
0
Share

கொரோனோ வைரஸ் பிரச்சனைகளில் உலகம் வெளிவர முதல் முறை தடுப்பூசி மட்டும் போதாதே இரண்டாம் கட்ட தடுப்பூசியும் தேவைப்படும் என்று பில்கேட்ஸ் தெரிவித்துள்ளார். இது பலரை கவலை கொள்ளச் செய்துள்ளது.

மைக்ரோசாப்ட் அதிபராக விளங்குபவர் பில்கேட்ஸ். இவர் கொரோனா தடுப்பூசி ஆராய்ச்சிக்காக பல கோடிகளை கொட்டி மெலின்டா மற்றும் பில் கேட்ஸ் அறக்கட்டளை சார்பாக தடுப்பூசி தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார். சில வாரங்களுக்கு முன்பு 2021 இறுதிக்குள் பணக்கார நாடுகளில் கொரோனாவிற்கான தடுப்பூசி போடப்பட்டு கொரோனாவில் இருந்து முழுமையாக விடுபட முடியும் என்று தெரிவித்தார்.

பின்பு வசதி குறைவான நாட்டில் உள்ள அனைவருக்கும் தடுப்பூசி உண்டு செல்ல 2022 இறுதிவரை ஆகும் என்றும் தெரிவித்திருந்தார். இவ்வாறு இரண்டாம் கட்ட தடுப்பூசி குறித்து அவர் கூறியிருப்பது அனைவரையும் கவலை அடையச் செய்துள்ளது.

பில்கேட்ஸ் முதன் முதலில் நம்பிக்கை ஊட்டும் வகையில் 2021க்குள் தடுப்பூசி கண்டுபிடித்து அனைவரும் குணமடைய முடியும் என்று நம்பிக்கை அளித்தார். அவரே தற்போது இவ்வாறு கூறியிருப்பது அனைவரையும் அச்சமடையச் செய்துள்ளது.


Share

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here