Home ஆன்மீகம் பிரதோஷம் வரும் கிழமையின் பலன்கள்:

பிரதோஷம் வரும் கிழமையின் பலன்கள்:

538
0
prathosham
Share

ஞாயிறு : சூரிய திசை நடக்கும் அனைவரும் ஞாயிறன்று வருகிற பிரதோஷத்திற்குக் கட்டாயம் செல்ல வேண்டும்.
பலன்கள் : சூரிய பகவான் அருள் வாக்கு கிடைக்கும் சூரிய திசையால் ஏற்படும் சிரமம் விலகி குடும்பத்தில்  ஒற்றுமையோடு ஓங்கும்.
திங்கள் : சோமவார(திங்கள்) பிரதோஷம் மிகவும் சிறப்புமிக்கது. சந்திர திசை நடப்பவர்கள் சந்திரனை லக்னாதிபதி ஸ்தானத்தில் கொண்டிருப்பவர்கள் திங்களன்று வரும் பிரதோஷத்தில் கலந்து கொள்ள வேண்டும்
பலன்கள் : மகிழ்ச்சி பெருகும், மனவலிமையும் நிம்மதியும் கிடைக்கும்.
செவ்வாய் : செவ்வாய் திசை இருப்பவர்களும், செவ்வாயை லக்னாதிபதி ஸ்தானத்தில் கொண்டிருப்பவர்களும் செவ்வாயன்று வரும் பிரதோஷத்திற்குச் செல்ல வேண்டும்.
பலன்கள் : ஏனென்றால் மனிதனுக்குச் செவ்வாயால் ஏற்படும் கெடுதல் நீங்கி பித்ரு தோஷம் நீங்கி கடன் தொல்லை நீங்கி மகிழ்ச்சியும் மன நிம்மதியும் பெருகும்.
புதன் : புதன் திசை கொண்டிருப்பவர்களும் புதன் லக்னாதிபதி ஸ்தானத்தில் வைத்திருப்பவர்களும் புதன் கிழமை அன்று வரும் பிரதோஷத்திற்குக் கட்டாயம் செல்ல வேண்டும்.
பலன்கள் : புதனால் ஏற்படும் கெடுதல் நீங்கி, கல்வி வளம் பெருகி அறிவு வளரும். படிப்பில் நாட்டம் இல்லாதவர்களும் நாட்டம் அடையச் செய்யும். இதனால் கல்வியில் சிறந்து விளங்குவர், தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெறுவர்.
வியாழன் : குரு பகவானுக்கு உகந்த நாளாகும். இந்நாளில் குரு திசையில் நடப்பவர்களும், குருவை லக்ன அதிபதியாகக் வைத்திருப்பவர்களும் பிரதோஷத்தில் கலந்து கொள்ள வேண்டும்.
பலன்கள் : தோஷம் விலகி நன்மை ஏற்படும்.
வெள்ளி : சுக்கிர திசை கொண்டவர்களும் சுக்கிரனை லக்னாதிபதியாக வைத்திருப்பவர்களும் வெள்ளியன்று வரும் பிரதோஷத்தில் கலந்துகொள்ள வேண்டும்.
பலன்கள் : உறவு மேம்படும், சர்வ வளமும் கிடைக்கும்.
சனி : சனிக்கிழமை வரும் பிரதோஷம் சாதாரணமாகச் சனி பிரதோஷம் என்று சொல்லக்கூடாது சனி மகா பிரதோஷம் என்றே சொல்ல வேண்டும். ஏனென்றால் சனிக்கிழமை வரும் பிரதோஷம் அவ்வளவு சிறப்புமிக்கது சனி திசை நடந்தாலும், சனி தங்கள் லக்னாதிபதியாக இருந்தாலும், அனைவருமே சனி பிரதோஷம் அன்று கோயிலுக்குச் சென்று சிவனை வழிபட வேண்டும். மேலும் முக்கியமாக ஏழரைச் சனி அஷ்டம சனி கொண்டிருப்பவர்கள் கட்டாயம் பிரதோஷத்தில் கலந்து கொள்ள வேண்டும். ஏனென்றால் சனிபகவானால் ஏற்படும் தீமை கண்டிப்பாக விலக சனிப்பிரதோஷத்தில் கலந்து கொள்ள வேண்டும்.
பலன்கள் : ஒரே ஒரு சனி பிரதோஷத்தில் கலந்து கொண்டால் 120 வருடத்திற்குப் பிரதோஷம் சென்ற பலன் கிட்டும். மேலும் கிரக தோஷத்தால் ஏற்படும் தீங்கு விலகி, பஞ்ச பாவங்கள் நீங்கி, சிவ  கடாக்ஷம் கிட்டும்.

Share

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here