Home செய்திகள் இந்தியா டாப் ட்ரெண்டிங்கில் #BanFriendsOfPolice ஹாஷ்டாக் !

டாப் ட்ரெண்டிங்கில் #BanFriendsOfPolice ஹாஷ்டாக் !

390
0
Share

பொதுவாகவே சமூகப் பிரச்சனைகளை ஏதாவது ஒன்று சமூக வலைத்தளங்களில் ட்ரண்ட் ஆகிவிடும். அதிலும் ஹாஷ்டாக் முறையில் இது குறித்து பேசுவது இந்த நவீன உலகத்தில் ஒரு முக்கியமாக கருதப்படுகிறது. அதே போல் தற்போது என்ற #BanFriendsOfPolice என்ற ஹாஷ்டாக் சமூக வலைதளங்களில் பயங்கர வைரலாகி வருகிறது.

சாத்தான்குளம் செல்போன் கடை உரிமையாளர் ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பெண்ணிக்ஸ் ராஜ் ஆகியோரை போலீசார் விசாரணைக்காக அழைத்துச் சென்ற அவர்கள் பிணமாக வெளிவந்தனர். இந்த சம்பவம் உலக அளவில் பயங்கர அதிர்ச்சி ஏற்படுத்தியது.

இதற்காக மதுரை உயர் நீதிமன்ற கிளை மாஜிஸ்திரேட் தாமாகவே முன் வந்து பிரேத பரிசோதனையும் சிபிஐ சிஐடி விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்று உத்தரவிட்டார்.

அதனடிப்படையில் இந்த கொலை வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வந்தது. இதற்கு 6 காவலர்கள் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் இந்த சம்பவத்திற்கு FriendsOfPolice உடந்தையாக இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.

இந்த பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் என்பது சாதாரண  பொதுமக்களே காவல்துறைக்கு உதவும் நோக்கில் உருவாக்கப்பட்ட ஒரு அமைப்பு தான். இதில் உள்ளவர்கள் அந்தந்த ஊர்களில் குறைவான காவலர்கள் கொண்ட காவல் நிலையத்திற்கு உதவ முன் வருவார்கள் இவர்கள் சில குறிப்பிட்ட பணியை மேற்கொள்வார்கள் இதற்கு காவல்துறையும் ஆதரிக்கும்.

இந்த சாத்தான்குளம் கொலை வழக்கில் தற்போது இந்த பிரெண்ட்ஸ் ஆஃப் போலீஸ் அமைப்பில் இருப்பவர்கள் தொடர்பிருப்பதாக தெரிந்ததால் அதற்கு கடும் எதிர்ப்பு அதிகரித்து வருகிறது. இதனை #BanFriendsOfPolice  ஹாஷ்டாக் என்ற வாயிலாக சமூக வலைதளங்களில் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர் அதனால் இந்த ஹாஸ்டேக் ட்ரெண்டாகி ஆகி விட்டது.


Share

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here