Home முகப்பு உலக செய்திகள் நேபாளத்தில் இந்திய தொலைக்காட்சி சேனல்களுக்கு தடை விதிப்பு!… என்ன காரணம்?

நேபாளத்தில் இந்திய தொலைக்காட்சி சேனல்களுக்கு தடை விதிப்பு!… என்ன காரணம்?

394
0
Government of Nepal
Share

தூர்தர்ஷன் தவிர அனைத்து இந்திய தொலைக்காட்சிகளுக்கும் நேபாளத்தில் தடை விதிக்கப்பட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

கடந்த சில நாட்களாக இந்தியாவுக்கு எதிராக சில சர்ச்சைக்குரிய கருத்துக்களை நேபாள அரசு தெரிவித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து நேபாளம் குறித்து இந்திய தொலைக்காட்சிகளில் பல்வேறு செய்திகள் ஒளிபரப்பாகி வருகின்றன

குறிப்பாக சீனாவின் பிடியில் நேபாளம் இருப்பதாகவும் சீனாவின் ஆணைக்கிணங்க நேபாளம் செயல்பட்டு வருவதாகவும் இந்திய தொலைக்காட்சிகளில் செய்திகள் வெளியாகி வந்தன. இந்த நிலையில் சற்று முன்னர் நேபாள அரசு அதிரடியாக தூர்தர்ஷன் தவிர மற்ற அனைத்து இந்திய தொலைக் காட்சிகளுக்கும் நேபாளத்தில் தடை விதிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த தடையும் சீனாவின் தூண்டுதலின் பேரிலேயே விதிக்கப்பட்டுள்ளதாக இந்திய செய்தி தொலைக்காட்சி ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இந்தியாவுக்கு எதிராக ஒருசில நடவடிக்கைகள் எடுத்ததன் விளைவாக கடந்த சில நாட்களாக நேபாள பிரதமருக்கு அரசியல் ரீதியாக நெருக்கடி வந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் அவர் இந்தியாவுக்கு எதிராக மேலும் ஒரு நடவடிக்கையை எடுத்துள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது


Share

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here