Home செய்திகள் இந்தியா மீண்டும் 250 செயலிகளுக்குத் தடை ! பப்ஜி தடையா..

மீண்டும் 250 செயலிகளுக்குத் தடை ! பப்ஜி தடையா..

491
0
pubg
Share

இந்தியா-சீனா இடையேயான லடாக் எல்லைப் பகுதியில் ஏற்பட்ட சண்டைக்குப் பிறகு சீன தொடர்புடைய 59 மொபைல் செயலிகளுக்கு மத்திய அரசு இந்தியாவில் பயன்படுத்தத் தடை விதித்தது. அதை அடுத்து தற்போது 49 செயலிகளுக்கு நேற்று தடை விதித்துள்ளது.

இந்த தடையை மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் வெளியிட்டது. இந்த செயலிகளுக்குத் தடை செய்யக் காரணம் என்ன வென்றால் இந்த செயலிகளை ஏற்கனவே தடை செய்யப்பட்ட செயலிகளுடன் தொடர்புடையது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த புதிதாகத் தடைசெய்யப்பட்ட செயலிகள் ஏற்கனவே தடை செய்யப்பட்ட செயலிகளின் லைட் வெர்ஷன் என்று அழைக்கப்படும் செயலிகள். எனவே இதனையும் தடை செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளனர். இந்த புதிதாக 47 செயலிகளில் டிக் டாக் லைட், ஹலோ லைட், போன்றவை மிக முக்கிய செயலிகள் கிலோன் வெர்ஷன்கள் ஆகும்.

இதைத் தொடர்ந்து மேலும் இருந்தது 250 செயலிகளுக்குத் தடைவிதிக்க ஆலோசனை செய்து வருவதாகத் தகவல் கிடைத்துள்ளது. இதில் அலிபாபா குழுமத்தில் உலக அளவில் புகழ்பெற்ற பப்ஜி மொபைல் செயலியும் இடம் பெற்றிருப்பதாகத் தகவல் கிடைத்துள்ளது. தற்போது பப்ஜி மொபைல் கேம் தடை செய்யப்படும் என்ற செய்தி சமூக வலைத்தளத்தில் ட்ரெண்டாகி வருகிறது.


Share

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here