Home செய்திகள் இந்தியா Telegram அப்பில் அட்டகாசமான அப்டேட்…

Telegram அப்பில் அட்டகாசமான அப்டேட்…

322
0
Share

உலக அளவில் பிரபலமான வாட்ஸ்அப் அடுத்தபடியாக விளங்குவது தான் இந்த Telegram. பல்வேறு குழுக்களை ஒரேடியாக இணைத்து தங்களுக்கான தகவல்களைப் பரிமாறிக் கொள்ளப் இந்த ஆப் பயன்படுகிறது. இதுவும் ஒரு வகையான சமூக வலைதளம் தான்.

அப்படி இருக்க இந்த ஆப் தற்போது ஒரு புதிய மாற்றத்தை கொண்டு வந்துள்ளது. அது என்னவென்றால் ஒரே பரிமாற்றத்தில் 2GB அளவு கொண்ட தரவுகளையும் எளியில் ஷேர் செய்ய முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்காக ஒரு புது அப்டேட் வெளியிட்டுள்ளது. பயனர்கள் வீடியோ, படங்கள் மற்றும் கோப்புகள் குறித்த தகவல்களை ஒரேயடியாக 2 GB வரை உள்ள கோப்புகளையும் எளிதில் மற்றவருடன் பரிமாறிக் கொள்ள முடியும் என்று Telegram தரப்பில் தெரிவித்துள்ளனர்.

இதற்காக டெலிகிராம் 6.3.0 என்ற புதிய அப்டேட்டை வெளியிட்டுள்ளனர். இந்த அப்டேட் இப்போது ஆண்ட்ராய்டு மற்றும் IOS பயனர்களுக்கு கிடைத்துள்ளது. இதற்காக அப்டேட் செய்து பெற்றுக் கொள்ளலாம். இதற்கு முன்பு 1.5 ஜிபி வரை மட்டுமே பரிமாறிக்கொள்ள முடியும்.

மேலும் வாட்ஸ் அப்பில் 16GB வரை ஒரே தடவையில் பகிர முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.


Share

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here