Home செய்திகள் இந்தியா அமேசானில் பொருள் வாங்குகிறீர்களா ! எளிதில் தீப்பிடிக்குமாம் … முதலில் இதை படிங்க…

அமேசானில் பொருள் வாங்குகிறீர்களா ! எளிதில் தீப்பிடிக்குமாம் … முதலில் இதை படிங்க…

311
0
Share

அமேசானில் சொந்த தயாரிப்பு பொருட்கள் மிக எளிதில் தீ பற்றிக் கொள்வதாக ஆய்வில் கூறப்படுகிறது. ஆம் உலகம் முழுவதும் மிகப்பெரிய ஆன்லைன் பொருட்கள் விற்பனையாக இருப்பது அமேசான் நிறுவனம் தான். இப்படி இருக்க இந்தியா உட்பட அமெரிக்கா இங்கிலாந்து என பல்வேறு நாடுகளில் அமேசான் நிறுவனத்தின் சொந்த தயாரிப்புகளையும் அமேசான் பேசிக் என்ற பெயரில் விற்பனை செய்து வருகிறது.

இதில் மைக்ரோ ஓவன், பேட்டரி, யுஎஸ்பி கேபிள், மல்டிபிளக் பாண்ட் போன்ற ஏராளமான எலக்ட்ரானிக் சாதனங்கள் விற்பனை செய்யப்படுகிறது. இந்த சாதனங்கள் அமேசான் நிறுவனத்தின் சொந்த தயாரிப்பில் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனை CNN என்ற செய்தி நிறுவனம் ஆய்வு செய்தது.

இந்த பொருட்களை எடுத்து மேரிலாண்ட் பல்கலைக் கழகத்தில் உள்ள இன்ஜினியரிங் ஆராய்ச்சித் துறைக்கு அனுப்பி ஆராய்ச்சி மேற்கொண்டது. ஆராய்ச்சி முடிவிலிருந்து திடுக்கிடும் தகவல் கிடைத்துள்ளது. அமேசான் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டு உள்ள அனைத்து எலக்ட்ரானிக் சாதனங்கள் எளிதில் தீப்பிடிக்கும் தன்மை கொண்டதாக உள்ளது என்று ஆராய்ச்சி முடிவு கிடைத்ததால் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

5 புதிய ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்யவுள்ள one plus..

இதே போல் வாடிக்கையாளர்களும் தங்கள் கருத்துகளைப் பதிவு செய்துள்ளனர். அதில் யுஎஸ்பி கேபிள் பயன்படுத்தும்போது மின்சக்தி தாங்க முடியாமல் எளிதில் உருகுவதாகவும், புகை வருவதாகவும் வாடிக்கையாளர்கள் ஏராளமான வாடிக்கையாளர்கள் கூறியுள்ளனர். எனவே வாடிக்கையாளர் கருத்துக்களைத் தொடர்ந்து பார்த்து பொருட்கள் வாங்கிக் கொள்ளும்படி CNN செய்தி நிறுவனம் எச்சரித்துள்ளது.


Share

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here