Home செய்திகள் இந்தியா தங்களை ரகசிய கேமரா கண்காணிக்கிறதா ? அறியும் சில எளிய வழிமுறைகள்..

தங்களை ரகசிய கேமரா கண்காணிக்கிறதா ? அறியும் சில எளிய வழிமுறைகள்..

969
0
Share

இந்த நவீன தொழில்நுட்ப உலகத்தில் ஏராளமான தொழில் நுட்பங்கள் மூலம் நவீன பொருட்களின் வளர்ச்சி அடைந்துள்ளன. அதிலும் அதிகம் பாதுகாப்பு சார்ந்த வளர்ச்சி அடைந்து இருப்பது இந்த கேமராக்கள் தான்.

கேமராவை பொருத்த வரை இரகசிய கண்காணிப்பாளராக இருந்து வருகிறது. அப்படியிருக்க ஒரு சில இடங்களில் ரகசிய கேமராக்களும் பயன்படுத்தப்படுகிறது. இந்த கேமராக்கள் கண்ணுக்குப் புலப்படாத வகையில் தான் கண்காணிக்கும். ஆம், இத்தகைய ரகசிய கேமராக்கள் கதவுகள், சுவரின் மூலைகள், சுவர்கடிகாரம், பூச்செடிகள், கண்ணாடிகள், வயர்கள் போன்ற கண்ணிற்குப் புலப்படாத இடங்களில் இருக்கும்.

இப்படி இருக்க இந்த ரகசிய கேமராக்களின் ஏராளமான பிரச்சனைகள், ஆபத்துகளும் வருகிறது. ஒரு சில நபர்கள் இந்த ரகசிய கேமராக்களை தவறான வழியில் பயன்படுத்துகின்றனர். இதனால் ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர், ஒரு சிலர் தன் உயிரையும் பிரிந்துள்ளனர். இப்படியிருக்க இந்த நவீன கேமராக்கள் நமக்கு பாதகமாகவும் அமைகிறது. பாதகமாகாமல் அதிலிருந்து எவ்வாறு தப்பிக்கலாம் என்பதை பார்ப்போம்.

பொதுவாகவே இந்த நவீன ரகசிய கேமராக்கள் கண்ணிற்குப் புலப்படாத வகையில் வைத்திருப்பர். உதாரணமாக ஒரு துணிக் கடைக்குச் சென்றால் ட்ரையல் ரூம் என்று சொல்லப்படும் உடை சரிபார்க்கும் இடத்தில் ஒரு சிலர் இந்த ரகசிய கேமராக்களை வைத்திருப்பதை எவ்வாறு கண்டறியலாம் என்றால் கண்ணாடியோ அல்லது ஏதாவது சம்பந்தமில்லாத வயர்கலோ இருந்தால், உங்களுக்கு சந்தேகம் ஏற்பட்டால் அதனை சோதித்துப் பார்க்க வேண்டும்.

கண்ணாடி என்பது உண்மையான கண்ணாடியை இல்லை தங்களைக் கண்காணிக்கும் ரகசிய கேமராக்கள் பொருத்தப் பட்ட கண்ணாடியா என்பதை எவ்வாறு அறியலாம் என்பதை பார்ப்போம். ஒரு கண்ணாடியின் மீது தங்களுக்கு சந்தேகம் ஏற்பட்டால் அதன் மீது உங்கள் விரலை வைத்துப் பாருங்கள் உங்களுக்கும் கண்ணாடிக்கும் இடையே இடைவெளி இருந்தால் அது உண்மையான கண்ணாடி இடைவெளி இல்லாமல் ஒட்டி இருந்தால் அதனை கேமரா பொருத்தி இருக்க வாய்ப்புள்ளது.

ஒரு சில இடங்களில் LED லைட் கண்ணாடியை சுற்றி பொருத்தப்பட்டிருக்கும். அத்தகைய கண்ணாடியையும் தங்களை கண்காணிக்க வாய்ப்புள்ளது. ஏனென்றால் இரவிலும் கண்காணிக்க இந்த LED விளக்குகள் பயன்படுத்தப்படுகின்றன. எனவே LED லைட் பொருத்தப்பட்டிருந்தால் அதன் மீதும் தங்கள் சந்தேகப்படலாம்.

இதைத் தவிர்த்து இன்ஃப்ரா ரெட் என்றழைக்கப்படும் டெக்னாலஜியை பயன்படுத்தி கேமரா பொருத்தப்பட்டுள்ளதா என்பதை கண்டறியலாம். பொதுவாகவே இந்த டெக்னாலஜி அனைத்து மொபைல் போன்களிலும் அமைக்கப்பட்டிருக்கும். அதை ஆன் செய்தவுடன் கேமரா இருந்தால் சிவப்பு விளக்கு எரியும். இதை ஒப்பிட்டு கண்டறியலாம் இதைத்தவிர Hidden Camera Detector என்று ஒரு ஆப் உள்ளது இதை பயன்படுத்தி கண்டறியலாம். ஆனால் இதில் நம்பகத் தன்மை சற்று குறைவுதான்.


Share

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here