Home லைஃப் ஸ்டைல் ஆரோக்கியம் எலுமிச்சை பழத் தோலில் இவ்வளவு நன்மைகளா ?

எலுமிச்சை பழத் தோலில் இவ்வளவு நன்மைகளா ?

396
0
lemon peel
Share

இயற்கையாகவே விளையும் எல்லா பழங்களின் சுவையை நாம் அனைவரும் அறிந்திருப்போம். அப்படியே சுவையையும் நன்மையும் நிறைந்த பழத்தை உண்டுவிட்டு அந்த பழத் தோலை நாம் தூக்கி எறிந்துவிடுவோம்.

இந்த பழத்தோலில் இன்னும் ஏராளமான மருத்துவ குணங்கள் உள்ளது என்பதை நாம் பெரும்பாலும் அறியாத ஒன்று.அது போல் ஆரஞ்சு பழத் தோலைக் கொண்டு முகச்சுருக்கத்தைப் போக்க முடியும், மாதுளைபழத் தோலைக் கொண்டு முடி உதிர்தலைக் கட்டுப்படுத்த முடியும், இப்படி ஏராளமான பழங்களின் தோல்களில் மருத்துவ குணங்கள் உள்ளது.

இந்த வரிசையில் தற்போது எலுமிச்சை பழத் தோலில் உள்ள நன்மைகளைப் பற்றிப் பார்ப்போம் :

எலுமிச்சை பழத்தில் வைட்டமின் C இருப்பது என்பது அனைவரும் அறிந்ததே, ஆனால் இந்த பழத்தின் தோலில் தான் இதை விட அதிக சத்துக்கள் உள்ளது. ஆம், நம் உடலுக்குத் தேவைப்படும் அனைத்து நன்மைகளும், சத்துக்களும் இந்த எலுமிச்சை பழத் தோலில் தான் அடங்கியுள்ளன. பழத்தைக் காட்டிலும் தோலில் தான் அதிக வைட்டமின் C அடங்கியுள்ளது.

இது போல் உடலுக்கு நன்மை அளிப்பதைத் தவிர ஏ, பீட்டா கரோட்டின், கால்சியம், மக்னீசியம், பொட்டாசியம், போலேட் போன்ற பல்வேறு சக்திகளும் இதில் அடங்கியுள்ளது.

நீண்ட நாள் படிந்த அழுக்கு கரைகளையும் சுத்தம் செய்வதில் எலுமிச்சை தோல் முக்கிய பங்கு வகிக்கிறது. அது மட்டுமில்லாமல், இந்த தோல் நறுமணத்துடனும், புத்துணர்ச்சி அளிக்கும் வகையிலும் இருக்கிறது.

எலுமிச்சை பழத் தோலை நறுக்கி அதில் 500 மிலி நீருடன் மூன்று நிமிடம் கொதிக்க வைத்து அந்த நீரில் தேன் கலந்து பருகினால் உடலில் ஏராளமான நன்மைகளும் ஏற்படும்.

அது என்னவென்று பார்ப்போம் : செரிமான பிரச்சனை இருப்பவர்கள் தினமும் காலையில் இதனை உண்டால் செரிமான பிரச்சனை நீங்கும். உடலின் உள்ள மெட்டபாலிசத்தை சீராக வைத்துக் கொள்ளும். தினமும் காலை எழுந்தவுடன் இதைப் பருகினால் உடலில் உள்ள கெட்ட கொழுப்புக்கள் நீங்கும். உடலின் மூலை முடுக்குகளில் ஒட்டியுள்ள நச்சுக்களும் வெளியேறி உடல் சுத்தப்படுத்தப்படும்.


Share

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here