Home செய்திகள் இந்தியா இன்ஜினியரிங் பகுதிநேர படிப்பிற்கான விண்ணப்பம் ஆன்லைன் வாயிலாகத் தொடங்கப்பட்டது…

இன்ஜினியரிங் பகுதிநேர படிப்பிற்கான விண்ணப்பம் ஆன்லைன் வாயிலாகத் தொடங்கப்பட்டது…

492
0
anna university
Share

பகுதிநேர இன்ஜினியரிங் படிப்பில் சேர ஆன்லைன் வாயிலாக விண்ணப்பம் விநியோகம் தொடங்கப்பட்டது இதில் பிஇ, பிடெக் படிப்பில் பகுதி நேரத்தில் சேர விருப்பமுள்ள மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.

தமிழகத்திலுள்ள அரசு, அரசு உதவி பெறும் சில கல்லூரிகள் மற்றும் ஒரு சில தனியார் கல்லூரிகளில் பகுதி நேர இன்ஜினியரிங் படிப்புகள் நடத்தப்படுகிறது. டிப்ளமோ முடித்து விட்டு குறைந்தபட்சம் இரண்டு ஆண்டுகள் ஏதாவது ஒரு நிறுவனத்தில் பணிபுரிந்து இருந்தால் இந்த படிப்பில் சேரலாம். இதில் கம்ப்யூட்டர் சயின்ஸ், சிவில் இன்ஜினியரிங் உட்பட 6 படிப்புகள் அடங்கியுள்ளது.

இந்த படிப்பிற்கும் கலந்தாய்வு முறையில் தான் மாணவர் சேர்க்கை நடைபெறும். இந்தப் படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் ஆன்லைன் வாயிலாக 10 தேதி முதல் தொடங்கப்பட்டுள்ளது. www.ptbe-tnea.com என்ற இணையதளத்தில் இந்த மாதம் இறுதி வரை விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா பரவல் இருப்பதால் ஆன்லைன் வாயிலாக மதிப்பெண் சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறுகிறது. இதில் மாணவர்கள் தங்கள் அருகிலுள்ள கல்லூரியைத் தேர்ந்து எடுக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கலந்தாய்வைக் கோயம்புத்தூர் இன்ஸ்டியூட் ஆஃப் டெக்னாலஜி கல்லூரி கண்காணிப்பின் கீழ் நடத்தப்படுகிறது.

மேலும் இது குறித்த சந்தேகங்களும் கேள்விகளும் இருந்தால் 94869 77757, 042 – 2-257 4071, 042 – 2-257 4072 என்ற எண்ணிற்குத் தொடர்பு கொண்டு தெளிவுபடுத்திக் கொள்ளலாம். இது குறித்த விளக்கம் பெற secretary ptbe@cit.edu.in மற்றும் ptbe.tnea@gmail.com என்ற இ -மெயில் வாயிலாகவும் பெற்றுக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


Share

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here