Home செய்திகள் இந்தியா Warren Buffet யை மிஞ்சினார் அம்பானி ! ஆசியப் பணக்காரர்களில் முதலிடத்தில் உள்ளார்…

Warren Buffet யை மிஞ்சினார் அம்பானி ! ஆசியப் பணக்காரர்களில் முதலிடத்தில் உள்ளார்…

428
0
ambani
Share

இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்பால் பெரும் பொருளாதார சரிவு ஏற்பட்டது. இதனால் ஆசியப் பணக்காரர் பட்டியலில் முதலிடத்திலிருந்த முகேஷ் அம்பானி இரண்டாவது இடத்திற்குத் தள்ளப்பட்டார். ஏனென்றால் ஊரடங்கு காரணமாகக் கச்சா எண்ணெய் பெரும் வீழ்ச்சியைச் சந்தித்தது. இதனால் இவருடைய வருவாய் பெரும் பாதிப்படைந்தது.

ஆனால் இந்த ஊரடங்கு காலத்தில் சீனா மீது கொரோனா வைரஸ் காரணமாக அனைத்து நாடுகளும் கோபத்திலிருந்தது. எனவே அந்நாட்டிலிருந்து முதலீடுகளை மிகப் பெரிய நிறுவனங்கள் வெளியில் எடுக்கத் துவங்கின. வேறு ஏதாவது ஒரு நல்ல நிறுவனத்தில் முதலீடு செய்ய வேண்டும் என்று எண்ணியிருந்தனர். அத்தகைய நேரத்தில் Reliance குழுமத்தின் தொலைத்தொடர்பு நிறுவனமான JIO வில் ஏராளமான முதலீடுகள் குவிந்தன. இதனால் இவருடைய பங்குகள் விலை விண்ணைத் தொட்டது.reliance

இதன் மூலம் இவருக்கு 1,15,693.95 கோடி ரூபாய் 24.17 சதவீத பங்குகளில் கிடைத்தது. மிகப்பெரிய நிறுவனங்கள் இந்த பங்குகளைக் கைப்பற்றின. இதன் மூலம் முகேஷ் அம்பானி மளமளவென தன் சரிவை ஈடுகட்டினார். அது மட்டுமின்றி கடன்களையும் இல்லாமலாக்கிவிட்டார் இவருடைய சொத்து மதிப்பு தற்போது 28 பில்லியின் வருவாய் உயர்ந்து மொத்தம் 68.3 பில்லியின் டாலராகக் கணக்கிடப்பட்டுள்ளது. இந்திய மதிப்பில் இது ரூ.4.9 லட்சம் கோடியாகும்.

இதனால் இந்தியா மற்றும் ஆசியப் பணக்காரர்கள் பட்டியலில் இவர் பெயர் மீண்டும் முதலிடத்தைப் பிடித்துள்ளது. அது மட்டுமின்றி உலக பணக்காரர்கள் பட்டியலில் 8வது இடத்தையும் பிடித்துள்ளார். இதில் ஒரு ஆச்சரியம் தரும் விஷயம் என்ன என்றால் உலக பணக்காரர்கள் பட்டியலில் உள்ள Warren Buffetயை மிஞ்சியுள்ளார்.

புளூம்பெர்க் நிறுவனம் வெளியிட்டுள்ள பணக்காரர்கள் பட்டியலில் உலக பணக்காரர்களின் அம்பானி 68.3 பில்லியின் டாலர் சொத்து மதிப்புடன் 8வது இடத்திலும் Warren Buffet 67.8 பில்லியின் டாலர் உடன் 9-வது இடத்திலும் உள்ளார். ஆனால் Warren Buffet சில மாதங்களுக்கு முன்பு 2.9 பில்லியின் டாலரைத் தொண்டு நிறுவனத்திற்கு வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.


Share

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here