Home லைஃப் ஸ்டைல் ஆரோக்கியம் அமேசானின் புதிய ஆரம்பம்!.. ஆன்லைன் வரவிருக்கும் மருந்துகள்!…

அமேசானின் புதிய ஆரம்பம்!.. ஆன்லைன் வரவிருக்கும் மருந்துகள்!…

343
0
Amazon Pharmacy
Share

அமேசான் நிறுவனம் இந்தியாவில் முதன்முறையாக ஆன்லைன் மருந்து விற்பனையை அறிமுகப்படுத்தியுள்ளது.

கொரோனா பொதுமுடக்கம் காரணமாக நோய்வாய்ப்பட்டவர்கள் வெளியே சென்று மருந்து வாங்குவதற்கும், மருத்துவர்களின் ஆலோசனைகளை பெறுவதற்கும் சிரமமாக கருதுவதால், பல ஆன்லைன் நிறுவனங்கள் வாடிக்கையாளர்களுக்கு சேவை வழங்குவதில் போட்டி போடுகின்றன.

இந்த கொரோனா காலத்தில் வயதானவர்கள் மருத்துவமனைக்கு செல்ல முடியாமல் அவதிப்படுவதால், அவர்கள் குறிப்பிட்ட ஆன்லைன் ஆப்கள் மூலமாக மருத்துவர்களை தொடர்புக்கொண்டு ஆலோசனைகளை பெறுகின்றனர். அதேநேரத்தில் சில மருந்தகங்கள், வாடிக்கையாளர்களுக்கு மருந்துகளையும் ஹோம் டெலிவரி செய்து வருகின்றன.

இந்நிலையில், பிரபல இ-காமர்ஸ் நிறுவனமான அமேசான், மருந்து விற்பனை சேவையிலும் கால் பதித்துள்ளது. ‛அமேசான் பார்மசி’ என்ற சேவை, மருந்துகள், அடிப்படை சுகாதார சாதனங்கள் மற்றும் பாரம்பரிய இந்திய மூலிகை மருந்துகளை வழங்கவுள்ளன.

கொரோனாவை கட்டுப்படுத்தும் மருந்தா! பிரான்ஸ் புதிய கண்டுபிடிப்பு…

முதல்கட்டமாக கர்நாடகா மாநிலம் பெங்களூரு நகரத்தில் மட்டும் இந்த சேவையை தொடங்கியுள்ள அமேசான், விரைவில் மற்ற நகரங்களிலும் இதனை விரிவுப்படுத்த இருப்பதாக தெரிவித்துள்ளது. மருத்துவர் பரிந்துரைத்த மருந்து சீட்டில் உள்ள மருந்துகளை ஆர்டர் செய்தால் அங்கீகரிக்கப்பட்ட மருந்தகங்களில் இருந்து பெற்று விநியோகிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், ஆன்லைன் மருந்து விற்பனை அல்லது இ-மருந்தகங்களுக்கான விதிமுறைகளை இந்தியா இன்னும் இறுதி செய்யவில்லை. ஆனால் மெட்லைப், நெட்மெட்ஸ், பார்ம் ஈஸி போன்ற பல ஆன்லைன் விற்பனைதளங்களின் வளர்ச்சி, பாரம்பரிய மருந்து கடைகளுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. இ-மருந்தகங்களுக்கு எதிராக பல வர்த்தக குழுக்கள் தொடர்ந்து எதிர்ப்புத் தெரிவித்தபோதும், அனைத்து இந்திய சட்டங்களுக்கும் இணங்குவதாக நிறுவனங்கள் கூறியுள்ளன.


Share

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here