Home செய்திகள் இந்தியா அமிதாப்பச்சன் குறலில் அமேசான் அலெக்சா !

அமிதாப்பச்சன் குறலில் அமேசான் அலெக்சா !

47
0
Share

இந்தியாவின் பிரபல ஆன்லைன் சந்தையாக விளங்கும் அமேசான் ஈகாமர்ஸ் அமீதாப்பச்சன் உடன் இணைந்து அலெக்சா வாய்ஸ் அசிஸ்டன்ட் அறிமுகப்படுத்த உள்ளது.

இந்தியாவில் பிரபலமான இ.காமெர்ஸ் அமேசான் மூலம் அலெக்சா விற்பனை செய்யப்படுகிறது. தற்போது அலெக்சா சேவையை அமிதாப்பச்சன் குரல் இணைக்கப்பட உள்ளது. அமிதாப்பச்சன் அமேசான் நிறுவனத்துடன் இணைந்து பணியாற்ற உள்ளார்.

அமிதாப்பச்சன் குரல் கொண்டு பதிலளிக்க மட்டுமல்லாமல் சில காமெடிகளும் அடிக்கடி அவர் பயன்படுத்தும் முக்கிய வார்த்தைகளையும் பேச வைக்க அமேசான் நிறுவனம் முயற்சித்து வருகிறது. அதன் பிறகு அலெக்சாவிடம் பயனர்கள் ஏதாவது கேள்வி கேட்டால் அமிதாப்பச்சன் குரல் மூலம் அதற்கான பதிலை பெற்றுக்கொள்ளலாம் என்று அமேசான் நிறுவனம் தெரிவித்துள்ளது.

(14-09-2020) இன்றைய நாளின் சிறப்பு என்னென்ன தெரியுமா ?

இந்த அம்சம் இந்த ஆண்டு இறுதியில் அல்லது அடுத்த ஆண்டு தொடக்கத்தில் வெளியாகும் என்று நிறுவனம் தரப்பில் கூறப்படுகிறது. இது மட்டுமில்லாமல் அமேசான் எக்கோ, ஃபயர் டிவி ஸ்டிக், அலெக்சா செயலி போன்ற அனைத்திலும் இது போன்ற சேவையை வழங்க நிறுவனம் முயற்சித்து வருவதாக தகவல் கிடைத்துள்ளது.


Share

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here