Home செய்திகள் இந்தியா நாளை முதல் தமிழகத்தில் வயது வாரியாக மது விற்பனை ! சில கட்டுப்பாடுகளும் அறிவிப்பு …

நாளை முதல் தமிழகத்தில் வயது வாரியாக மது விற்பனை ! சில கட்டுப்பாடுகளும் அறிவிப்பு …

433
0
wine shop
Share

கொரோனா வைரஸ் பரவுதலைக் கட்டுப்படுத்தும் விதமாக நாடு முழுவதும் மூன்றாம் கட்டமாக மே 17ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. தற்போது 40 நாட்கள் ஊரடங்கு முடிவடைந்துள்ள நிலையில் பச்சை ஆரஞ்சு சிகப்பு என மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு சில தளர்வுகளை மத்திய, மாநில அரசுகள் கூறியுள்ளன. அதில் மதுக்கடைகளை சில கட்டுப்பாடுகளுடன் திறக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.Tasmac
 
ஒவ்வொரு கடைக்கும் தலா 2 காவலர்கள், 2 ஊர்காவல் படையினர், 1 தன்னார்வலர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. ஒவ்வொருவருக்கும் இடையே 6 அடி இடைவெளியை உறுதி செய்ய வேண்டும்.கூட்டத்தைப் பொறுத்து 3 பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுப் பாதுகாப்பு தர வேண்டும். கடைக்கு அரை கி.மீ.க்கு முன்பாகவே மதுப்பிரியர்களின் வாகனங்களை நிறுத்தி விட்டு வரிசைப்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
 
அதைத் தொடர்ந்து தமிழகத்தில் நாளை முதல் (07.05.2020) சென்னை மாநகர காவல் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும் பகுதிகளைத் தவிர மற்ற பகுதிகளில் மதுக்கடைகள் திறக்கப்படும் என அறிவிப்பு வெளிவந்துள்ளது. இந்நிலையில் வயது அடிப்படையில் நேரம் ஒதுக்கி எந்தெந்த வயதினருக்கு எந்தெந்த நேரத்தில் மதுவிற்பனை என்ற தகவல் வெளியாகியுள்ளது. அதில் 50 வயதுக்கு மேற்பட்டவர்களுக்குக் காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரையும், 40 முதல் 50 வயதுக்குட்பட்டவர்களுக்கு மதியம் 1 மணி முதல் மதியம் 3 மணி வரையும், 40 வயதுக்குட்பட்டவர்களுக்கு மதியம் 3 மணி முதல் மாலை 5 மணி வரை அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

Share

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here