Home செய்திகள் இந்தியா ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கை குழு கூட்டம் ஒத்திவைப்பு…

ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கை குழு கூட்டம் ஒத்திவைப்பு…

333
0
RBI
Share

ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கை குழு உறுப்பினர்கள் கூட்டம், இன்று நடப்பதாக இருந்த நிலையில், நாள் குறிப்பிடப்படாமல் தள்ளி வைப்பதிருப்பதாக, ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

ரிசர்வ் வங்கியின் 6 உறுப்பினர்கள் கொண்ட நிதிக் கொள்கை குழு கூட்டம், இன்று செப்-29, முதல் அக்டோபர், 1ம் தேதி வரை நடைபெற இருப்பதாகவும் அக்கூட்டத்தின் இறுதியில், வட்டி விகிதம் குறித்த முடிவுகள் குறித்த அறிவிப்புகள் வெளியாகும் எனவும் முன்னர் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இந்நிலையில், இக்கூட்டம் இன்று நடைபெறாது என்றும், கூட்டம் நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும், ரிசர்வ் வங்கி நேற்று தெரிவித்துள்ளது. இருப்பினும், கூட்டம் தள்ளி வைக்கப்பட்டதற்கான காரணத்தை ரிசர்வ் வங்கி தெரிவிக்கவில்லை.

சென்னை புறநகர் ரயில்கள் சேவை ! மீண்டும் அக்டோபர் 7 முதல் தொடங்குகிறது…

ரிசர்வ் வங்கி அதன் நிதிக் கொள்கை குழுவில் இடம்பெற இருக்கும் புதிய வெளி உறுப்பினர்கள் குறித்த அரசின் முடிவு குறித்து காத்திருப்பதாக கூறப்படுகிறது. ரிசர்வ் வங்கி சட்டப்படி, வெளி உறுப்பினர்களுக்கான பதவிக் காலம், 4 ஆண்டுகளாகும்.

தற்போதைய குழு கடந்த, 2019 அக்டோபரில் உருவாக்கப்பட்டதாகும். புதிய வெளி உறுப்பினர்கள் குறித்த அரசின் முடிவு தெரிந்த பிறகு, கூட்டத்திற்க்கான தேதி அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Share

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here