Home செய்திகள் இந்தியா ரிலையன்ஸ் நிறுவனத்தில் குவியும் பங்குகள்…

ரிலையன்ஸ் நிறுவனத்தில் குவியும் பங்குகள்…

538
0
Share

கொரோனா வைரஸ் தொற்றுக்கு பிறகு உலகம் முழுவதிலும் இருந்து ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்திற்கு ஏராளமான முதலீடுகள் குவிந்து வருகிறது. நேற்று அபுதாபி முதலீட்டு ஆணையமான, ஏ.டி.ஐ.ஏ., ரிலையன்ஸ் ரீடெய்ல் வணிகத்தில், 5,512.50 கோடி ரூபாயை முதலீடு செய்ததை அடுத்து, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்குகள் விலை, நேற்று, 4 சதவீதம் வரை அதிகரித்தது இதனால் தேசிய பங்கு வர்த்தகமான நிப்டி உச்சத்தை அடைந்தது.

தொடக்கத்தில் இருந்து வர்த்தகத்தின் இடையே, 4 சதவீதம் வரை அதிகரித்த ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவன பங்குகள், வர்த்தக இறுதியில், 2.13 சதவீதம் அதிகரித்து, 2,257.15 ரூபாயாக உயர்ந்தது.ஏ.டி.ஐ.ஏ., மூலமாக, 5,512.50 கோடி ரூபாய் முதலீட்டை பெற்றதை இதுவரை ரிலையன்ஸ் ரீட்டெய்ல் வெஞ்சர்ஸ் நிறுவனம் மொத்தமாக 37 ஆயிரத்து, 710 கோடி ரூபாய் நிதியை திரட்டி இருக்கிறது.

இந்தியா விரைவில் தடுப்பூசியை விநியோகிக்கும் – மோடி…

ஏ.டி.ஐ.ஏ., நிறுவனம், 5,512.50 கோடி ரூபாய் முதலீடு செய்ததை அடுத்து, அதற்கு ரிலையன்ஸ் ரீட்டெய்ல் நிறுவனத்தின், 1.20 சதவீத பங்குகள் தம் வசம் கொண்டுள்ளது.

ரிலையன்ஸ் ரீடெய்லில் முதலீடுகள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளது :

நிறுவனம் முதலீடுகளின் மதிப்பு (ரூபாய் கோடிகளில்)

சில்வர் லேக் 9,375.00

கே.கே.ஆர்., 5,550.00

ஜெனரல் அட்லாண்டிக் 3,675.00

முபதாலா 6,247.50

ஜி.ஐ.ஜி., 5,512.50

டி.பி.ஜி., 1,837.50

ஏ.டி.ஐ.ஏ., 5,512.50

மொத்தம் 37,710.00


Share

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here