Home செய்திகள் கொரோனா பத்தாம் வகுப்பு தனித்தேர்வர்கள் ஆல்பாஸ் செய்யக் கோரிக்கை..

பத்தாம் வகுப்பு தனித்தேர்வர்கள் ஆல்பாஸ் செய்யக் கோரிக்கை..

625
0
DPI
Share

இந்த ஆண்டு பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு கொரோனா வைரஸ் பாதிப்பினால் ரத்து செய்யப்பட்டது. பள்ளி மாணவர்கள் அனைவருக்கும் காலாண்டு, அரையாண்டு மற்றும் வருகைப் பதிவின் அடிப்படையில் மதிப்பெண் வழங்க வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை அறிவித்துத் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது.

இதே போன்று ஒவ்வொரு ஆண்டும் தனித்தேர்வர்கள் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வை எழுத விண்ணப்பித்துத் தேர்வு எழுதுவர். அந்த வகையில் இந்த ஆண்டு விண்ணப்பித்துள்ள தனித்தேர்வர்கள் நிலையைக் குறித்து எந்தவித முடிவும் தெரிவிக்கப்படவில்லை.

எனவே பள்ளிக் கல்வித்துறைக்கு பத்தாம் வகுப்பு தனித்தேர்வர்கள் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கக் கோரி கோரிக்கை வைத்துள்ளனர். இது தொடர்பாகப் பள்ளிக் கல்வித்துறை எந்த முடிவையும் எடுக்காததால் தற்போது இந்த கோரிக்கை வலுத்துள்ளது.

இந்த தனித்தேர்வர்கள் ஏராளமான இடங்களில் பணிபுரிவர். அவர்கள் பணி வாய்ப்பு பெறுவதற்கும் பதவி உயர்வு பெறுவதற்கும் அல்லது ஒரு சில அரசுப் பணிகளுக்கு முயற்சி செய்வதற்கும் இந்த பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு மதிப்பெண் உதவிக்கரமாக இருக்கும் என்று தான் இவர்கள் தேர்வு எழுத விண்ணப்பித்துள்ளனர். அவர்களின் நோக்கத்தைப் புரிந்து தனித்தேர்வர்கள் தேர்ச்சி பெற்றதாகப் பள்ளிக் கல்வித்துறை அறிவிக்க வேண்டும் என்று கோரிக்கைக்கு இன்னும் எந்த முடிவும் பள்ளிக் கல்வித் துறை வெளியிடவில்லை.

விரைவில் இந்த பத்தாம் வகுப்பு தனித் தேர்வர்களுக்கான நிலையை அறிந்து பள்ளிக் கல்வித்துறை ஒரு நல்ல முடிவினை வெளியிடும் என்று அனைவரும் எதிர்பார்க்கின்றனர்.


Share

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here