Home செய்திகள் இந்தியா 1 வருட அமேசான் சந்தா இலவசம் ! ஏர்டெல் புதிய ரீசார்ஜ் திட்டம் …

1 வருட அமேசான் சந்தா இலவசம் ! ஏர்டெல் புதிய ரீசார்ஜ் திட்டம் …

458
0
airtel amazon
Share

ஏர்டெல் நிறுவனத்தின் துவக்க விலை சலுகைகள் ஆன 40Mbps மற்றும் 100Mbps உடன் அமேசான் பிரைம் சந்தா மற்றும் ஜீ5 ஒரு வருட சந்தாவை இலவசமாக வழங்குவதாக தகவல் கிடைத்துள்ளது. இந்த புதிய சலுகை குறித்த தகவல் ஏர்டெல் தேங்ஸ் செயலியில் இருப்பதாக சில வாடிக்கையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

ஏர்டெல் பிராட்பேண்ட் சலுகை விலை ரூ. 499 முதல் துவங்குகிறது. இதற்கு முன்பு அமேசான் பிரைம் சந்தா இந்த ரீசார்ஜ் திட்டங்களில் வழங்கப்படாமல் இருந்தது. அமேசான் பிரைம் மற்றும் ஜீ5 சந்தா உள்ளிட்டவை 200Mbps மற்றும் அதிக வேகம் கொண்ட பிராட்பேண்ட் சலுகை திட்டங்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டு வந்தது.

இந்தியா – ஜப்பான் கூட்டு ! எதில் தெரியுமா ?

ஆனால் தற்போது ஏர்டெல் பிராட்பேண்ட் துவக்க விலை சலுகைகளிலும் அமேசான் ஒரு வருட பிரைம் சந்தா வழங்கப்படுகிறது. இந்த புதிய சலுகை தொடர்பான விவரங்கள் ஏர்டெல் வலைதளம் மற்றும் ஏர்டெல் தேங்ஸ் செயலியில் பதிவேற்றம் செய்யப்படவில்லை. ஆயினும், சலுகை பலன்கள் குறிப்பிட்ட சிலருக்கு மட்டும் வழங்கப்படுவதாக கூறப்படுகிறது.

இந்த புதிய திட்டத்தின் படி ஏர்டெல் ரூ. 499, ரூ. 589 போன்ற சலுகைகளுக்கும் அமேசான் பிரைம் சந்தா வழங்கப்படுகிறது. இவற்றில் அன்லிமிட்டெட் டேட்டா, அதிகபட்சம் 40Mbps வேகம், அன்லிமிட்டெட் அழைப்புகள் மற்றும் ஏர்டெல் எக்ஸ்டிரீம் செயலிக்கான சந்தா வழங்கப்படுகிறது.


Share

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here