Home செய்திகள் இந்தியா வறுமை ஒழிப்புச் சிந்தனைக்காக நோபல் பரிசு

வறுமை ஒழிப்புச் சிந்தனைக்காக நோபல் பரிசு

462
0
Share

வறுமை என்பது மனித குலத்திற்கே சவாலாக இருக்கிறது. பல திட்டங்கள் வகுத்தும் அதை ஒழிக்க முடியவில்லை. தற்போதைய சூழலில் 70 கோடி பேருக்கும் மேல் வறுமையில் தவித்துக் கொண்டிருக்கிறார்கள் என்று ஆய்வுகள் சொல்கின்றன.

இந்நிலையில் வறுமை ஒழிப்புச் சிந்தனைக்காக  இந்திய வம்சாவளியைச் சார்ந்த அபிஜித் பானர்ஜி (58), அவரது மனைவி எஸ்தர் டப்லோ(47) மற்றும் அவர்களுடன் ஆய்வு செய்த மைக்கேல் கிரேமர் ஆகிய மூன்று பேருக்கும் ‘தி ராயல் சுவீடிஷ் அகாடமி ஆஃப் சயன்ஸ்’ (The Royal Swedish Academy of Sciences) பொருளாதார பிரிவில் நோபல் பரிசை அறிவித்திருக்கிறது.

இந்த நோபல் ஆய்வாளர்களின் அறிவியல் பூர்வமான அணுகுமுறை அரசின் உதவித் திட்டங்களின் பலன்களை அளவிடுவதற்கும், பரிசீலனை செய்வதற்கும், அரசின் வீண் செலவுகளைத் தவிர்ப்பது அல்லது குறைப்பதற்கும், பயனுள்ள திட்டங்களை உரிய கண்காணிப்புகளுடன் செயல்படுத்தவும் உபயோகமாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர்களது ஆய்வின் மூலம் செழுமைப்படுத்தப்பட்ட வறுமை ஒழிப்புத் திட்டங்கள் இதுவரை
40 கோடி ஏழைகளுக்குப் பயனளித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

மக்களுக்கான திட்டங்கள், கொள்கைகளை முடிவெடுக்கும் அமைச்சர்கள், செயல்படுத்தும் அதிகாரிகள், ஆய்வு செய்யும் ஆராய்ச்சியாளர்கள் ஆகிய மூவரையும் ஒரே புள்ளியில் சந்திக்க வைக்கும் அளவிலான ஆய்வுகளை பின்பற்றுவோம் என்று தமிழக முதல்வர் கூறியிருப்பது ஆறுதலளிக்கிறது.


Share

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here