Home ஆன்மீகம் வடபழனி முருகன் கோயில் குடமுழுக்கு விழா…

வடபழனி முருகன் கோயில் குடமுழுக்கு விழா…

1095
0
Murugan Temble Vadapalani
Share

ஓம் முருகா!…
தமிழ் கடவுள் என்றாலே முருகர் தான். முருகருக்கு அறுபடைவீடு உள்ளது என்பது நம் அனைவருக்கும் தெரிந்தது தான். அவ்வறுபடை வீட்டில் ஒன்றான பழனி என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. அதே போல் சென்னையில் உள்ள வடபழனியும் அனைவருக்கும் தெரிந்த ஒன்று தான். தற்போது வடபழனியில் உள்ள முருகன் கோயிலில் 13 வருடம் கழித்து தற்போது குடமுழுக்கு நடைபெற உள்ளது.

2020 ஓநாய் சந்திர கிரகணம் (Penumbral Lunar Eclipse ): 2020 ஆம் ஆண்டில் முதல் கிரகணம் – சந்திர கிரகணம்

இது சென்னை மக்களின் மிகப் பெரிய கும்பாபிஷேக விழாவாக இருக்கும் என நம்பப்படுகிறது. நடைபெறும் நாள்: 11.03.2020 மற்றும் 12.03.2020.

Murugar Temble

11.03.2020 நாளான புதன் கிழமை காலை 9 மணி முதல் 11.30 மணிவரை அனுக்ஞை, கணபதி ஹோமம், மற்றும் நவக்கிரக ஹோமம் ஆகிய பூஜைகள் நடைபெறும். மாலை 6 மணியிலிருந்து இரவு 8 மணிக்குள் முதற்கால யாகபூஜைகள் தொடங்கி நடைபெறும். பக்தர்களுக்குப் பிரசாதம் வழங்கப்படும். இரவு 9.30 மணிக்கு பூரணாகுதி தீபாராதனை நடைபெறும். மேலும் ஹோம பூஜை மிகவும் சிறப்பாக நடைபெறும் பக்தர்கள் அனைவரும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்வது நல்லது.

மறுநாள் 12.03.2020 தேதி அதிகாலை 5.50 மணிக்கு இரண்டாம் கால யாக பூஜைகள் நடைபெறும். அடுத்து காலை 8 மணிக்கு மஹா பூரணாகுதி தீபாராதனை நடைபெறும். அதைத் தொடர்ந்து முக்கிய நிகழ்வான கோவில் கும்பாபிஷேகம் காலை 8.30 மணிக்கு நடைபெறுகிறது. அதையடுத்து காலை 9.15 மணிக்குச் சுவாமி தரிசனம் தொடங்கப்பெறும். கும்பாபிஷேகம் விழாவைக் காண்பதற்குத் திரளான பக்தர்கள் கூடுவார்கள் என்பதால் பாதுகாப்பு மற்றும் பக்தர்களின் வசதிக்கான ஏற்பாடுகளை காவல்துறையும் கோயில் நிர்வாகமும் இணைந்து மேற்கொண்டு வருகின்றன.


Share

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here